பாபர் மசூதி இடிப்பு தினம்- மீனவர்கள் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு
ராமேஸ்வரம்:
இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்தக் கோரி நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். அதே போல நாளை மறுதினம் பாபர் மசூதி இடிப்புதினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளதால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும், ரயில் பாலங்களுக்கும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கைமீனவர்களால் கடத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் விடுதலைப் புலிகளும் இந்த வரிசையில் சேர்ந்து கொண்டுதமிழக மீனவர்களைக் கடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர். இலங்கை அட்டூழியத்தை தடுத்த நிறுத்த மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவை கோரியுள்ளன.
அதேபோல, ராமேஸ்வரம் மீனவர்களும் நாளை முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர். முதல் கட்டமாக ரயில்மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் போஸ்தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 77 ராமேஸ்வரம் மீனவர்களில், 12படகோட்டிகளத் தவிர மற்ற 61 பேரையும் விடுவித்து விட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து வரும் தகவல்கள்தெரிவிக்கின்றன. முதலில் 62 பேரை இலங்கை பிடித்துச் சென்றதாக தகவல்கள் வந்தன. ஆனால், இப்போது அநதஎண்ணிக்கை 77 என்று தெரியவந்துள்ளது.
பாம்பன் பாலத்திற்கு பாதுகாப்பு:
இந் நிலையில் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளதால் ராமேஸ்வரம் பாம்பன் கடல்பாலத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய ரயில்வே போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர். ரயில்வே போலீஸாரைத் தவிரவேறு யாரும் ரயில் பாலத்தில் நடக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும்மற்றும் வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
அதேபோல சாலை பாலத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள்அனைத்தும் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன. பாலத்தின் மீது வாகனங்களைநிறுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications