கல்பாக்கத்தில் அதிகரிக்கும் புற்று நோய் சாவுகள்: அணு உலை கதிரியக்கத்தால் பரவுகிறது ஆபத்து
சென்னை:
மிக அரிதாக வரும் மல்டிபிள் மைலோமா என்னும் எலும்புப் புற்றுநோய் காரணமாக கல்பாக்கத்தில் சமீபத்தில்மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் பலரும் இந்தப் பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்இங்குள்ள அணு உலையின் கதிரியக்கம் குறித்த அச்சம் நிறைந்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
6 மாதங்களுக்கு முன், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் அதிக அளவுகதிரியக்க வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சோதனை செய்து பார்க்கும் போது, ஒரு வருடத்தில் எவ்வளவு கதிரியக்கப் பரவலை ஒரு மனிதர்ஏற்றுக்கொள்ளலாம் என மருத்துவ துறை நிர்ணியித்திருக்கும் அளவை அவர்கள் ஒரு மணிநேரத்தில்பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கல்பாக்க அணுமின் நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்பின் நிலையஇயக்குனர் பட்டாசார்யா,
இது எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து. அதிக கதிரியக்க தன்மை கொண்ட கழிவுப் பொருள்களிலிருந்து குறைந்தகதிரியக்கத் தன்மை கொண்ட திரவத்தைப் பிரித்தெடுக்கும் ஸேப்டி வால்வ் பழுதடைந்ததால்தான் இவ்வறுநேர்ந்தது. இதுபோல் இனி நேராது என்று விளக்கமளித்தார். அதன்பின் தொழிலாளர்கள் வேலைைக்குத்திரும்பினர்.
இந்த பரபரப்பு ஓயும் முன்பே, இப்போது கதிரியக்கப் பரவல் காரணமாக புற்றுநோய் ஏற்பட்டு 3 பேர்இறந்திருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மோகன்தாஸ் மற்றும் பொன்னையா என்ற 2பேர் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்தவர்கள். சுந்தரம்மாள் என்பவர் கல்பாக்கத்தில் வசித்து வந்தவர்.
இது குறித்து நிலைய உயர் அதிகாரிகள் கருத்து கூற மறுத்து வருகின்றனர்.
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவனையில் பணிபுரியும் மருத்துவர் புகழேந்தி இது குறித்துக்கூறுகையில்,
சென்னையில் ஒரு வருடத்தில் இந்தப் புற்றுநோய் காரணமாக லட்சம் பேரில் 2.4 பேர் இறப்பது சராசரிவிகிதமாகும். ஆனால் கல்பாக்கத்தில் கடந்த 18 மாதங்களில் 3 பேர் இறந்திருப்பது சராசரியை விட 4 மடங்குஅதிகமாகும்.
இந்த மல்டிபிள் மைலோமா புற்றுநோய் அதிக கதிரியக்கப் பரவல் காரணமாக வரும் நோய் என இங்கிலாந்தில்உள்ள மருத்துவர்கள் 1986ம் ஆண்டில் நிரூபித்துள்ளனர். இந் நிலையில் கல்பாக்கத்தில் மேலும் இரண்டு அணுஉலைகளை நிறுவ முடிவு எடுத்திருப்பது அந்தப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலை மேலும் கதிரியக்கமயமாக்கி விடும்என்றார்.


Click it and Unblock the Notifications
