மணல் குவாரிகள் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மணல் குவாரிகளை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்புஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழக அரசு ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதன்படி, தமிழகம் முழுவதிலும்உள்ள தனியார் மணல் குவாரிகளை அரசே கையகப்படுத்திக் கொண்டது. தனியார் மணல் குவாரிகளின் உரிமம்ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து அரசே மணலை விற்பனை செய்து வருகிறது.

இதை எதிர்த்து தனியார் மணல் குவாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன்,அரசின் உத்தரவுக்கு தடை விதித்தார். ஆனால் அரசுஉடனடியாக மேல் முறையீடு செய்தது.

மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச், தனியார் மற்றும்அரசு ஆகிய இருவரும் மணல் அள்ளுவதற்குத் தடை விதித்தது. அதன் பின்னர் தனியாருக்கு உரிமம்வழங்கப்படாத, வழக்கில் தொடர்பில்லாத இடங்களில் மட்டும் அரசு மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்தனர்.

இந்த வழக்கில் பல நாட்களாக நடந்து வந்த விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+