தடையை மீறி போராட்டம்: 500 த.மு.மு.கவினர் கைது
கோயம்புத்தூர்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று ஊர்வலமாய் சென்று ஆர்பாட்டம் நடத்த முயன்ற தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் பல இடங்களில் இந்தக்கட்சியினர் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதரீதியில் பதற்றம் மிகுந்த கோயம்புத்தூரில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ள. இங்கு போலீஸ் தடையுத்தரவும் அமலில் உள்ளது. ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தின் அருகே தடையை மீறிப் போராட்டம் நடத்த முயன்ற500 த.மு.மு.க. தொண்டர்களும் இன்று கைது செய்யப்பட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்களை போலீசார் ரெட்கிராஸ் கட்டடத்தின் அருகிலேயே வழி மறித்து கைது செய்து வேன்களில் கொண்டு சென்றனர்.
இந் நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் த.மு.மு.க. தொண்டர்கள் கோவைக்குவேன்கள், கார்களில் வருவதால் அவர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல நாகர்கோவிலிலும் ஊர்வலம் நடத்த முயன்ற 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் கடையடைப்பு:
இதற்கிடையே நெல்லையில் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதோடு, ஆங்காங்கே கறுப்புக்கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளன. மசூதி இடிப்பை எதிர்த்தும், மீண்டும் கட்டக் கோரியும் போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளன.
மதுரையில்..
மதுரை மீனாட்சி அம்மன், ஆலயம், திருப்பரங்குன்றம், கூடலழகர் பெருமாள் கோவில் போன்ற ஆலயங்களில்ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இது தவிர மாநிலம் முழுவதும் ரயில்களிலும் பஸ்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேங்காயில் பாம் வைக்கப்படலாம் என்பதால் சில கோவில்களில் தேங்காய் உடைக்கவும், கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களும்,பயணிகளின் பெட்டிகளும் சோதனையிடப்படுகின்றன.
தண்டவாளங்கள், பாலங்களில் ரோந்துப் பணிகள் இடைவிடாமல் நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் 26,000போலீசார் இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் அமைதியான ஊர்வலம்:
சென்னையில் மன்ரோ சிலையிலிருந்து தமுமுகவினர் ஊர்வலமாக சென்றனர். கருப்புக்கொடிகளுடன் ஊர்வலம்சென்ற அவர்கள் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications