மயிலாடுதுறை பாஜக எம்.எல்.ஏ அலுவலகம் மீது குண்டு வீச்சு
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியனின் அலுவலகத்தின் மீதுஇன்று அடையாளம் தெரியாத சிலர் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அந்தக் கொட்டகைதீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறையில், கண்டனப் பேரணி நடத்த தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேசமயம், இந்த தினத்தை இந்து எழுச்சி நாளாக அனுசரிக்கப் போவதாக பாரதிய ஜனதாக் கட்சி மற்றும்வி.எச்.பி. ஆகியவை கூறியுள்ளன. இதனால் மயிலாடுதுறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று அதிகாலை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியனின் அலுவலகத்தின் மீதுநாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அடையாளம் தெரியாத சிலர் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடினர்.
இதில் அலுவலகக் கொட்டகை தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பா.ஜ.க. எம்எல்ஏவின் அலுவலகம் மீதுகுண்டு வீசப்பட்டதால் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications