ஓசூரில் தேவாலயத்தின் மீது பா.ஜ.கவினர் கல்வீச்சு: கிருஸ்துவர்கள் பதில் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மதகண்டபள்ளியில், வட மாநிலத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடஊர்வலம் நடத்திய பாரதிய ஜனதாக் கட்சியினர் அங்குள்ள கிருஸ்தவ தேவாலயத்தின் மீது கல்வீசித் தாக்குதல்நடத்தினர். இதையடுத்து கிருஸ்துவர்கள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் காயமடைந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களில் பா.ஜ.க.வும், டெல்லியில், காங்கிரஸும் வெற்றி பெற்றன.இதைக் கொண்டாடும் வகையில் ஓசூர் அருகே உள்ள மதகண்டபள்ளி பகுதியில் பா.ஜ.க.வினர் ஊர்வலம்சென்றனர். வழியெங்கும் இனிப்புகள் கொடுத்தபடி சென்றனர்.

அப்போது தேவாலயம் ஒன்றின் அருகே சென்றபோது அதன் மீது ஊர்வலத்தில் சென்றவர்கள் கல் வீசித் தாக்குதல்நடத்தியுள்ளனர். இதையடுத்து தேவலாயத்தில் இருந்த கிருஸ்துவர்கள் ஊர்வலத்தினர் மீது பயங்கரத் தாக்குதல்நடத்தினர்.

இதனால் நிலை குலைந்த பா.ஜ.கவினர் பின்னர் ஆட்களைத் திரட்டி வந்து எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தமோதலில் 6 பேர் காயமடைந்தனர்.

சம்பவம அறிந்து விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் கலைந்து போகச் செய்தனர். மேலும் தாக்குதலில்ஈடுபட்ட இரு தரப்பையும் சேர்ந்த 11 பேரைக் கைது செய்தனர். காயமடைந்தவர்களை போலீசார் உடனடியாகமருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதுஇரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+