பொடா: மறு ஆய்வு குழுவை தடை செய்ய கோரி தமிழகம் மனு- உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை:
பொடா மறு ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
லட்சுமி பிரானேசின் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
பொடா சட்டத்தின் 60வது பிரிவின்படி மத்திய, மாநில அரசுகள் தேவைப்பட்டால் மட்டுமே மறு ஆய்வுக்குழுக்களை நியமித்துக் கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
வைகோ மற்றும் ‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்,மறு ஆய்வுக் குழு இந்த வழக்குகளில் தலையிடுவது நல்லதல்ல. அது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகஅமையும். மேலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் அது பாதிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபாலன், பொடா மறு ஆய்வுக் குழுக்கூட்டத்தில் வைகோ, கோபால் கைது குறித்த ஆவணங்களைத் தர ஒப்புக் கொண்ட தமிழக அரசு இப்போது தனதுநிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
தனது ஆட்சேபணைகளை தமிழக அரசு மறு ஆய்வுக் குழுவிடமே தெரிவிக்கலாம். இதைவிட்டுவிட்டு பொடாமறுஆய்வுக் குழுவின் விசாரணைக்கே தடை கோருவது முறையல்ல என்றார்.
இதையடுத்துப் பேசிய நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உச்ச நீதிமன்றம் கோபாலின் ஜாமீன்மனுவை மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரிக்கவில்லை. எனவே கோபாலின் வழக்கை மறுஆய்வுக் குழு பரிசீலிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
முத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதாசிவம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications