ஹைதராபாத் மதக் கலவரம்: இதுவரை 6 பேர் பலி- ஊரடங்கு அமல், இன்று பா.ஜ.க. பந்த்
ஹைதராபாத்::
ஹைதராபாத்தில் நடந்த மதக் கலவரத்தில் இதுவரை 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 22 பேர்படுகாயமடைந்துள்ளனர். 3 பேர் கத்திக் குத்துகளாலும் 3 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் பலியாகியுள்ளனர்.காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சனிக்கிழமை இரவில் ஆரம்பித்த இந்தக் கலவரத்தையடுத்து பழையஹைதராபாத் பகுதியில் 8 காவல் நிலைய எல்லைகளில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. மேலும்அங்கும் செகந்திராபாத்திலும் 144வது பிரிவின் கீழ் போலீஸ் தடையுத்தரவும் அமலில் உள்ளதால் அங்கு இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் இன்று ஒரு நாள் பந்துக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
ஒரு வழிபாட்டுத் தலத்தின் எதிரே இன்னொரு மதத்தினரின் கொடி ஏற்றப்பட்டதையடுத்து கல்வீச்சில் ஆரம்பித்தவன்முறை மதக் கலவரமாக மாறியது. இதையடுத்து இரு சமுதாயத்தினரும் ஒருவரை ஒருவர் கல்வீசியும்,கத்திகளாலும் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் இறந்தனர்.
கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். கடைகளில் புகுந்து நகைகள், பணம், துணிகள், எலெக்ட்ரானிக்பொருள்கள் என கையில் கிடைத்ததை அள்ளிச் சென்றனர்.
மேலும் சைக்கிள் செயின்களை வீசி ஷார்ட்- சர்க்கியூட் செய்ய வைத்து மின்சார டிரான்ஸ்பார்மர்களையும்கலவரக்காரர்கள் வெடிக்க வைத்தனர். இதனால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
கலவரக்காரர்களை ஒடுக்க காவ்லிபுரா, சுல்தான்சகாய், மொகல்புரா ஆதிய இடங்களில் போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தியதில் 3 பேர் பலியாயினர்.
தபீர்புரா. பவானிநதர், மொகல்புரா, பலாக்னுமா, சத்ரிநகா, மீர் தெளக், ஷா அலி பண்டா ஆகிய காவல் நிலையஎல்லைப் பகுதிகளில் அமலில் உள்ள ஊரடங்கு இன்று மாலை வரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால்மீண்டும் அது நீட்டிக்கப்படும் எனவும் ஹைதராபாத் போலீஸ் கமிஷ்னர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
இது ஒரு திட்டமிடப்பட்ட கலவரம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தெலுங்கானாராஷ்ட்ரீய சமிதியினர் தான் இந்தக் கலவரத்தைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications