வைகோ: தமிழக அரசின் ஆட்சேபனை குறித்து விளக்கம் தர மத்திய அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவு
டெல்லி & சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோரது கைது விவகாரத்தில் தமிழகஅரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேபனை மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழுநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வைகோ, கோபால் கைது செய்யப்பட்டது குறித்து தன்னிடம் கேள்வி எழுப்ப பொடா மறு ஆய்வுக் குழுவுக்குஅதிகாரமே இல்லை என ஆட்சேபனை மனு ஒன்றை தமிழக அரசு இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தது.
இதையடுத்து இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலையை வரும் 22ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றுநீதிபதி சகார்யா தலைமையிலான குழு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வைகோ கோரிக்கை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இதற்கிடையே நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரி வைகோ தாக்கல் செய்துள்ள மனுகுறித்து, நாளை மறுதினத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்ற நீதிபதிராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அவரசச் சட்டம் தொடர்பாகநாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இதில் தன்னைக் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பொடாநீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.இதையடுத்து வழக்கை வரும் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அப்போது பேசிய வைகோ, நான் நாடாளுமன்ற விவாதததில் கலந்து கொள்வதைத் தடுக்கும் விதத்தில் தமிழகஅரசு வேண்டும் என்றே கால தாமதம் செய்கிறது. இதனால் தான் இன்று அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகவில்லைஎன்றார்.
இதையடுத்து அரசுத் தரப்பைக் கடிந்து கொண்ட நீதிபதி, இது தொடர்பாக 10ம் தேதிக்குள் பதில் தருமாறு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டார். மேலும், முடிந்தால் அன்றைக்கே தீர்ப்பு வழங்குவதாகவும் அறிவித்தார்.
உயர் நீதிமன்றம் நோட்டீஸ்:
இந் நிலையில் பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த அவசரச்சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பொடா மறு ஆய்வுக் குழுவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதைஎதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications