வீரப்பன் "கோட்டையில்" நாய் வேட்டையாடி வரும் அதிரடிப்படை
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை இப்போது காட்டுப் பகுதி கிராமங்களில்நாய்களை சுட்டு வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக வீரப்பனின் சொந்தக் கிராமமான கோபிநத்தம் மற்றும் அதைச் சுற்றிய மலை கிராமங்களில் இந்த நாய்வேட்டை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப் படையினருக்கு பெரும் தலைவலியாக இந்த நாய்கள்விளங்குகின்றன. அதிரடிப் படையினரைப் பார்த்ததும் நாய்கள் குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன.
இதனால் வீரப்பன் கூட்டாளிகள், வீரப்பனுக்கு உதவி செய்வோர் தப்பி விடுவதாக அதிரடிப்படையினர்கருதுகின்றனர்.
மேலும், காட்டுக்குள் அதிரடிப் படையினர் செல்லும்போதும் நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அங்கும்இந்தப் படையினரைக் காட்டுக் கொடுக்கின்றன இந்த நாய்கள்.
இதையடுத்து நாய்களை சுட்டுக் கொல்ல அதிரடிப் படையினர் முடிவு செய்தது.
இதுவரை கோபிநத்தம், அதைச் சுற்றிய கிராமங்களில் திரிந்த 30க்கும் மேற்பட்ட நாய்களை அதிரடிப் படையினர்பிடித்துக் கொன்று விட்டனர். இதனால் அப் பகுதி கிராம மக்களிடையே கடும் அதிருப்தி பரவியுள்ளது.
காடுகளுக்குள் விறகு சேகரிக்க செல்லும் போது தங்களுக்கு இந்த நாய்கள்தான் துணையாக இருப்பதாகவும் பிறமிருகங்களை நாய்கள் குரைத்து விரட்டி விடுவதால் தங்களது பாதுகாப்புக்கு அவை மிக உதவியாகஇருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
அதிரடிப் படையின் அதிரடி வேட்டையால் இப்போது மலைப் பகுதி கிராமங்கள் நாய்கள் இல்லாத கிராமங்களாகமாறி வருவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications