கதர்துறை ஊழியர்கள் 1.200 பேர் டிஸ்மிஸ்: அரசு அதிரடி
சென்னை:
தமிழ்நாடு கதர் கிராம வாரிய கடைநிலை ஊழியர்கள் 1,200 பேரை டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடையாது என அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கதர் கிராம வாரியத் துறையில் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவ் வாரியம்நஷ்டத்தில் இயங்கியதால் ஆட்குறைப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி 1,200 கடைநிலைஊழியர்களை வேலைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்களுக்கு ஒரு மாத சம்பளப் பணம் மட்டுமே வழங்கப்படும். ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படமாட்டாதுஎன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நீக்கம் செய்யப்பட்ட 1,200 பேரும் கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்கள்.
வேலை நீக்கம் குறித்த தகவல் அறிந்ததும் இந்த ஊழியர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். துறையின் தலைமைஅலுவலகமான குறளகம் வளாகத்தில் கலங்கிய கண்களுடன் துறையின் செயலாளர் சூசன் மாத்யூவைச் சந்தித்துதங்களது கதி குறித்து பேச முயன்றனர்.
ஆனால் அவரின் உதவியாளர் மட்டுமே ஊழியர்களிடம் பேசினார். டிஸ்மிஸ் உத்தரவு உடனடியாக அமலுக்குவராது என இந்த ஊழியர்களுக்கு சமாதானம் கூறப்பட்டுள்ளது.
அரசுத்துறையின் செலவுகளைக் குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் அமைக்கப்பட்ட சுவாமிநாதன்கமிட்டியின் பரிந்துரையின்பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications