ஜெயலலிதா அரசியல் நாகரீகம் இல்லாதவர்: கருணாநிதி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அரசியல் நாகரீகம் இல்லாதவர் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துப் பார்ப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர்களில் ஒருவரானகுமாரவேலு கூறுகிறார். அதை ஆமோதிப்பதாக மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரும் சொல்கிறார்.
ஆனால், அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாவோ திமுக எங்கள் கூட்டணிக் கட்சி என்றும் அதிமுக எதிர்க்கட்சி என்றும் சொல்கிறார்.
இதன்மூலம் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதாகத் தெரிகிறது. அதற்கு ஒருகட்டுப்பாடு போடுவது அந்தக் கட்சிக்கு நல்லது.
மத்திய அமைச்சரவையில் இருந்த ஜூதேவ் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டபோது அவரை கட்சியை விட்டு நீக்கினார்பிரதமர் வாஜ்பாய். அது அவரது நாகரீக அரசியலைக் காட்டுகிறது.
அதே போல சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து வாங்க முனைந்ததைஅறிந்து அவரைக் கட்சியை விட்டு நீக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதுவும் அரசியல்நாகரீகத்துக்கு சிறந்த உதாரணம்.
அதே நேரத்தில் எது அரசியல் நாகரீகம் அல்ல என்பதற்கும் உதாரணம் உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அடுக்கடுக்காய் கண்டனக் கணைகளைப் பொழிந்த பிறகும் அது பற்றி கவலையேபடாமல் பத்திரிக்கைகளில் தன்னைப் (ஜெயலலிதா) பற்றி பாராட்டுரைகள் எழுதச் செய்வதும், அதைபத்திரிக்கைகள் எழுதுவதும் தான் நாகரீகமின்மைக்கு உதாரணங்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications