சட்ட விரோதமாக குடியேற உதவி: அமெரிக்காவில் 3 இந்தியர்கள் கைது
வாஷிங்டன்:
மோசடி ஆவணங்கள்மூலம் அமெரிக்காவுக்குள் இந்தியர்களை ஊடுருவச் செய்த 3 இந்தியர்கள் மற்றும் ஒருஅமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பொய்யான காரணங்களைக் கூறி இவர்கள் ஆட்களை அமெரிக்காவுக்குள்ஊடுருவச் செய்துள்ளனர்.
அமெரிக்காவுக்குள் வர விரும்பியவர்களிடம் இருந்து இதற்காக பல்லாயிரம் டாலர்களை இந்தக் கும்பல்வசூலித்துள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த மோசடி நடந்து வந்துள்ளது.
இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவச் செய்துள்ள இக் கும்பல்மொத்தத்தில் 1 மில்லியன் டாலர்கள் வரை பணம் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவ வைப்பது தவிர, விசா காலத்தைக் கடந்தும் தொடர்ந்துஅமெரிக்காவிலேயே தங்கியிருக்க விரும்பியவர்களுக்கும் இந்தக் கும்பல் மோசடி வழிகளில் உதவி செய்துள்ளது.
இந்தத் தகவலை நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஸ்டார் லெட்ஜர் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ஸ்காட் ரெஸ்னிக் கூறுகையில், இக் கும்பல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10ஆண்டுகள் வரை சிறையில் தள்ள முடியும் என்றார்.
விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகளை இக் கும்பல் சந்தித்து, அமெரிக்காவிலேயேநிரந்தரமாக தங்க விருப்பமா என்று கேட்டு, அதற்கு ஆர்வம் தெரிவித்தவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுகஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஓடிஸ் மூலமாக போலி ஆவணங்கள் தயார் செய்து நிரந்தரமாய் அமெரிக்காவில்தங்கிவிட உதவி செய்துள்ளது.
இந்த மோசடி நடப்பது குறித்து அறிந்த போலீசார், இன்பார்மர்களை விமான நிலையங்களில் உலாவ விட்டனர்.அப்போது நியூயார்க் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய போலீஸ் இன்பார்மரை சுதிர் பஸ்ஸியும் சிரிபாட்சிரோடியும் சந்தித்து பேரம் பேசினர். அமெரிக்காவில் நிரந்தரமாய் தங்கிவிட உதவுவதாகவும் அதற்கு 4,000 டாலர்செலவாகும் என்றும் கூறினர்.
இதற்கு அந்த இன்பார்மர் ஒப்புக் கொள்வதாகக் கூறவே, கஸ்டம்ஸ் அதிகாரி ஓடிஸை ரேக்லி அங்கு வந்தார்.
அவர் அந்த இன்பார்மரை கஸ்டம்ஸ் சோதனைகள் ஏதும் நடத்தாமலேயே அந்த விமான நிலையத்தில் இருந்துவெளியே அழைத்து வந்தார். யாரும் கேட்டால் மருத்துவ பரிசோதனைக்காக வந்ததாகச் சொல்லுமாறும் ஓடிஸ்கூறினார்.
இந்த சம்பவங்களை தூரத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார் ஓடிஸையும், சுதிர் மற்றும் சிரோடியையும்கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தான் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 200க்கும்மேற்பட்டவர்களை இவ்வாறு அமெரிக்காவுக்குள் ஊடுருவ வைத்துள்ள விவரம் தெரியவந்தது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications