பொடா கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் கூடாது: அதிமுக கொ.ப.செ. மனு
சென்னை:
பொடா மறு ஆய்வுக் குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தத் தடைவிதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மணியன் இன்று வழக்குத்தொடர்ந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பொடா மறு ஆய்வுக் குழுவிற்கு அதிக அதிகாரம் வழங்கி மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. இது சட்ட விரோதமானது.
பொடா மறு ஆய்வுக் குழு விசாரணை நடத்துவதால் பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குவிசாரணைகள் பாதிக்கப்படும். எனவே அவசர சட்டத்தை அமுல்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட மசோதாகுறித்த விவாதத்தில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்க வழங்க வேண்டும் என்று கோரி வைகோ தாக்கல்செய்துள்ள மனு மீது நாளை பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புலிகளால் தீங்கு விளையாது: வைகோ
இதற்கிடையே பொடா நீதிமன்றத்தில் நிருபர்களிடம் அவர் பேசிய வைகோ,
தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான் மதிமுகவின் கொள்கை. இதற்காக கடந்த 22 வருடங்களாகநாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்துள்ளேன். தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் பிடித்துச்செல்லும்போதெல்லாம், அதை விடுதலைப் புலிகள் தடுத்து தமிழக மீனவர்களை விடுவித்துள்ளனர். இதற்கானஆதாரங்களை என்னால் தர முடியும்.
தமிழக மீனவர்களுக்கு ஒருபோதும் விடுதலைப் புலிகள் தீங்கு விளைவிக்க மாட்டார்கள் என நான் உறுதியாகநம்புகிறேன் என்றார்.
நாடாளுமன்றத்தில் எதிரொலி:
இதற்கிடையே வைகோ விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டஎதிர்க் கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முயன்றனர். அவற்றிற்கு சபாநாயகர் ஜோஷிஅனுமதி அளிக்கவில்லை.
அப்போது பேசிய முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கடந்த ஓராண்டு காலமாக வைகோ சிறையில் துன்பப்பட்டுவருகிறார். இது குறித்துக் கூட நாம் விவாதிக்காவிட்டால் எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகமேகேள்விக்குறியாகிவிடும் என்றார். இதையடுத்து சந்திரசேகரின் கருத்தை ஆதரித்து தெலுஙகு தேச எம்.பி. யெர்ரன்நாயுடு உள்ளிட்ட பல எம்.பிக்களும் பேசினர்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications