மெரீனாவை தொடர்ந்து மேலும் சில கடற்கரைகளை அழகுபடுத்த திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மெரீனா கடற்கரைக்கு அடுத்தபடியாக சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருக்கும்,நீலாங்கரைக்கும் இடையே உள்ள கடற்கரைகளை சுத்தப்படுத்தி அழகுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமையைப் பெற்ற சென்னை மெரீனா கடற்கரைதற்போது சுத்தமாகவும், குப்பைகள் இல்லாத கடற்கரையாகவும் திகழ்கிறது.

முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த மெரீனா அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மெரீனா கடற்கரைசுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நீண்ட காலமாக கடற்கரையின் ஒரு அங்கமாக இருந்து வந்த சீரணி அரங்கம் இடித்துத் தள்ளப்பட்டது.அதற்காக அமைக்கப்பட்ட சாலைகளும் தகர்க்கப்பட்டன. வேறு சில கட்டடங்களும் காணாமல் போயின. தற்போதுவெறும் மணல் மட்டுமே மெரீனாவில் உள்ளது.

மெரீனா கடற்கரையில் மீனவர்கள் தங்களது கட்டுமரப் படகுகளை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட இடம்ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும்தான் கட்டுமரப் படகுகளை அவர்கள் நிறுத்த வேண்டும். அதேபோல, சிறுவியாபாரிகளும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும், குப்பைகளை போடக் கூடாது.இரவில் கடற்கரையில் யாரும் தங்க அனுமதி கிடையாது.

மொத்தம் 6 அமைப்புகள் மெரீனாவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. கடற்கரையில் சேரும்குப்பைகளை அள்ளும் பொறுப்பு, விளக்கு வசதிகளை ஏற்படுத்துவது ஆகியவற்றை மாநகராட்சிமேற்கொண்டுள்ளது.

சர்வீஸ் சாலைகளை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கு, மணற் பரப்பை பாதுகாப்பது வருவாய்துறையினுடையது. காமராஜர் சாலையைப் பராமரிப்பது மாநில நெடுஞ்சாலைத் துறையினுடையது. கடற்கரையில்உள்ள சிலைகள், எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடங்களை பாதுகாப்பது செய்தி விளம்பரத் துறையின்பொறுப்பாகும்.

மெரீனாவை சுத்தப்படுத்துவதற்காக ரூ. 35 லட்சம் மதிப்புள்ள பீச்டெக் என்ற கருவியை வாங்கியுள்ளனர். இந்தக்கருவி மூலம் கடற்கரை மணலில் உள்ள குப்பைகள் எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.

மெரீனா திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து இத் திட்டத்தை சென்னை நகரின் மற்ற கடற்கரைகளானசாந்தோம், பெசன்ட் நகர் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவுசெய்துள்ளது. அதேபோல திருவான்மியூருக்கும், நீலாங்கரைக்கும் இடையிலான கடற்கரையும்அழகுபடுத்தப்படும்.

பீச் டெக் கருவி லம் இந்தக் கடற்கரைகளும் குப்பைகள் இல்லாத கடற்கரைகளாக மாற்றப்படும் என்று சென்னைப்பெருநிகர வளர்ச்சிக் குழும துணைத் தலைவர் ஜெயந்தி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+