மேட்டூர் அணையை திறக்க விவசாயிகள் கோரிக்கை
திருச்சி:
மேட்டூர் அணையைத் திறந்து விடுமாறு கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருச்சி மாவட்ட காவிரி டெல்டாவிவசாயிகள் சங்கத் தலைவர் கனகசபை தந்தி அனுப்பியுள்ளார்.
காவி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியைதொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். இடையில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன்சாகுபடியை நடத்தினர். இதனால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதும் நிறுத்தப்பட்டது.
தற்போது காவிரி டெல்டா பகுதிகளில் மழை நின்று விட்டது. மேட்டூர் அணையிலிருந்தும் தண்ணீர்திறக்கப்படவில்லை. இதனால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் திருச்சி காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் கனகசபை முதல்வர் ஜெயலலிதாவுக்குஅவசரத் தந்தி அனுப்பியுள்ளார். அதில், சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாகமேட்டூர் அணையைத் திறந்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேட்டூர் அணையில் தற்போது 56 அடி தண்ணீர்தான் உள்ளது. இது விவசாயத்திற்குப் போதாது. இருந்தாலும்இந்தத் தண்ணீரையாவது திறந்து விட்டால்தான் ஓரளவாவது பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
திருச்சி மாவட்டத்தில் 85,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடந்துள்ளது. கடந்த பத்து நாட்களாக தண்ணீர்இல்லாத காரணத்தால் இந்த விவசாயிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பயிர் சாகுபடிசரியில்லாமல் போய் விட்டது. எனவே இந்த சம்பா சாகுபடி சரியாக நடந்தால்தான் விவசாயிகள் பிழைக்க முடியும்என்று கூறியுள்ளார் அவர்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications