பெண்ணின் கையில் 8 கிலோ புற்றுநோய் கட்டி: அகற்றி மதுரை அரசு மருத்துவமனை சாதனை
மதுரை:
பெண்ணின் வலது கையில் இருந்து 8 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டியை அகற்றி மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
முர்ஷிதா பேகம் என்ற அந்த 20 வயதுப் பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பது மூன்று வருடங்களுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரின் கை வெட்டி எடுக்கப்பட வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது.
அதை அவர் விரும்பாவிட்டால், புற்றுநோய்க் கட்டியை நன்கு வளரவிட்டு அதன்பின் அறுவை சிகிச்சை மூலம்அகற்றலாம் என்று மாற்று யோசனையையும் மருத்துவர்கள் அவரிடம் கூறினர். இதற்கு பேகம் ஒப்புக்கொண்டார்.
அதன்பின் கடந்த 3 வருடங்களாக அவரது கையில் புற்றுநோய்க் கட்டி வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில கையைத்தூக்கி எழுத முடியாத அளவுக்கு 8 கிலோ எடையுள்ளதாக அந்தக் கட்டி வளர்ந்தது. இதனால் படிப்பை அவர்பாதியிலேயே நிறுத்தினார்.
இந் நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி அறுவைச் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டார். டாக்டர் மோகன் பிரசாத் தலைமையிலான மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்துபேகத்தின் கையிலிருந்த 8 கிலோ புற்றுநோய்க் கட்டி வெற்றிகரமாக அகற்றினர்.
மருத்துவ உலகில் இவ்வளவு பெரிய புற்றுநோயக் கட்டி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். சிகிச்சைக்குப் பின் பேகம் இப்போது எழுதும் அளவிற்கு தேறியுள்ளார். இருப்பினும் கதிரியக்கசிகிச்சை உள்ளிட்ட மேலும் சில சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டியிருப்பதாக டாக்டர் மோகன் பிரசாத்கூறியுள்ளார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications