பொடா போராட்டம்: திமுகவினரை கைது செய்ய போலீசுக்கு இடைக்கால தடை
சென்னை:
பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் மாநில அரசைக் கண்டித்தும் வரும் 15ம் தேதி திமுக நடத்தவிருக்கும்போராட்டத்தை ஒடுக்க முன்கூட்டியே அக் கட்சியினரைக் கைது செய்யும் போலீசாரின் திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடக்கும். அதுவரை இந்த இடைக்காலத் தடை அமலில் இருக்கும் எனநீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,
திமுகவினரின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், திமுக தலைவர்கள், தொண்டர்களைமுன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆளுங்கட்சியைத்திருப்திபடுத்துவதற்காக போலீஸாரும் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடும்.
மக்களிடம் கருத்து உருவாக்கும் வகையில் பொது இடத்தில் ஆயுதம் இன்றி கூடுவதற்கு ஜனநாயக அமைப்பில்உரிமை உள்ளது. எனவே திமுகவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்ய இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கியபெஞ்ச் நாளை காலை வரை திமுகவினரை கைது செய்ய போலீசாருக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இது ஜனநாயக நாடு, கொடுங்கோல் ஆட்சி அல்ல. ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்த திமுகவினருக்குஉரிமை உண்டு என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடக்கும் என அறிவித்தனர்.
அப்போது போராட்டத்தை எங்கெல்லாம் நடத்தலாம் என்று இடங்களின் விவரத்தை தாக்கல் செய்யுமாறு தமிழகஅரசுக்கு உத்தரவிட்டனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications