பாண்டிச்சேரிக்கு மாற்ற கோருகிறார் ஜெ.- கர்நாடகத்தில் பாதுகாப்பு இல்லையாம்
டெல்லி:
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை கர்நாடகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரிமுதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரானமனப்பான்மை நிலவுவதால் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் எந்த இடத்தில் நீதிமன்றம் அமைப்பது என்பதில் அம் மாநில அரசு குழம்பி வருகிறது. தினந்தோறும்ஒரு இடத்தை சொல்லி வருகிறது.
இந் நிலையில் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கலாகியுள்ளது.
அந்த மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றிப் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யவேண்டும். ஆந்திரம், கேரளம், கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே நதி நீர் பிரச்சனைகள் இருந்துவருகின்றன. குறிப்பாக கர்நாடத்துடன் காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. இதனால்தமிழகத்தின் மீது கர்நாடகத்தினர் கசப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.
ராஜ்குமார் கடத்தலால் இரு மாநில உறவுகளும் மேலும் மோசடைந்தன.
எனவே, இந்த வழக்கு விசாரணை கர்நாடகத்தில் நியாயமாக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கானவாய்ப்பும் இல்லை. அங்கு எனது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை. ஒருவித அச்சத்துடன் தான் பெங்களூரில்நடக்கும் வழக்கு விசாரணைகளில் நாங்கள் கலந்து கொள்ள வேண்டி இருக்கும்.
மேலும் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்திலும் மத்திய சிறை வளாகத்திலும் போதிய பாதுகாப்பு இருக்காது எனபத்திரிக்கைகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் இந்த வழக்கில் சாட்சிகள் அனைவரும் தமிழர்கள்,ஆவணங்களும் தமிழில் தான் உள்ளன.
இதனால் அவற்றை மொழி பெயர்ப்பு செய்யவும், சாட்சிகளின் வாக்குமூலத்தை மொழி பெயர்ப்பு செய்யவும்நீண்ட காலம் பிடிக்கும். மேலும் மொழி பெயர்ப்பின்போது தவறுகளும் நடக்கலாம். எனவே கர்நாடகத்தில்விசாரணை நடத்துவதற்கு தடை விதித்து, வழக்கை புதுவை மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
புதுவையில் காங்கிரஸ் தான் ஆட்சியில் உள்ளது, எதிர்க் கட்சியாக திமுக உள்ளது. எனவே அங்கு நியாயமானவிசாரணை நடக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இந்த மனு, வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி வரியவா மற்றும் நீதிபதி சேமா ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர்வைத்தியநாதன், இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றார்.
இந்தக் கோரிக்கையை தலைமை நீதிபதி கரேவிடம் சொல்லுங்கள் என அவரிடம் நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து தலைமை நீதிபதியிடம் வழக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி காரே தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச், வழக்கின் தன்மைகுறித்து தெரிவிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டனர். அவர் இந்த வழக்கை விசாரணைக்குஏற்கலாம் என்று சொன்னால் நாளை இதன் மீது விசாரணை நடக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் கோரிக்கைப்படி, பாண்டிச்சேரியில் நீதிமன்றம் அமைக்கப்பட்டால் அது சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை நீதிபதி- கிருஷ்ணா சந்திப்பு:
இந் நிலையில் பெங்களூரில் எந்த இடத்தில் விசாரணை நீதிமன்றத்தை அமைப்பது என்பதில் பெரும் குழப்பத்தில்கர்நாடக அரசு சிக்கித் தவிக்கிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என். கே. ஜெயினை கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்துப் பேசினார்.
ஆனால், இந்த சந்திப்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைத்தால் ஏற்படும்பிரச்சனைகள் குறித்து கிருஷ்ணா விளக்கினார் என்றும், அதே நேரத்தில் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்புநீதிமன்றம் அமைக்கலாம் என்ற கிருஷ்ணாவின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஒப்புக் கொள்ளவில்லை என்றும்கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையத்திற்கு அருகே சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாமா என்று அரசு யோசித்து வருகிறது.நீதிமன்றத்திற்கான இடம் தவிர அரசுத் தரப்பில் யாரை வழக்கறிஞராக்குவது என்ற குழப்பமும் நிலவுகிறது.
சிறப்பு நீதிமன்றத்தை பாண்டிச்சேரிக்கு மாற்ற ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறித்துநிருபர்கள் கேட்டபோது கருத்து கூற கிருஷ்ணா மறுத்துவிட்டார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications