பொடா மறு ஆய்வு குழுவிற்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள்: திமுக, மதிமுக, பாமக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா மறு ஆய்வுக் குழுவிற்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வேண்டும் எனவும், அதற்கேற்க வகையில்மாற்றங்கள் செய்து பொடா சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும்திமுக, மதிமுக மற்றும் பாமக எம்.பி.க்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்து அவர்கள் மனு கொடுத்தனர்.

திமுக மத்திய அமைச்சர் ராஜா தலைமையில் அக் கட்சியின் எம்.பிக்களான பழனி மாணிக்கம், ஆதிசங்கர்,ஜெயசீலன், வெற்றிச் செல்வன், மதிமுக அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், எம்.பி. கிருஷ்ணன்மற்றும் பாமக எம்.பி பொன்னுசாமி ஆகியோர் அத்வானியைச் சந்தித்தனர்.

அவர்கள் அத்வானியில் அளித்த மனுவில், பொடா வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, மறு ஆய்வுக்குழுவின் உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மேலும் நீதிமன்றவிசாரணையை நிறுத்தும் அதிகாரம் மறு ஆய்வுக் குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு அத்வானி, நீங்கள் வைகோ மீதான வழக்கை மனதில் வைத்து இந்தக் கோரிக்கையை வைத்துள்ளீர்கள்.ஆனால் தேசிய நோக்கில் பார்க்கும்போது, தீவரவாதிகளை ஒடுக்கவதற்காகக் கொண்டு வரப்பட்ட இச் சட்டத்தில்மேலும், மேலும் திருத்தங்கள் செய்து கொண்டிருந்தால், அச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமேதோற்கடிக்கப்பட்டுவிடும்.

இருப்பினும், இது குறித்து பிரதமருடனும், சட்ட அமைச்சருடனும் ஆலோசனை நடத்துவேன் என்றார்.

பொடாவில் கைது செய்யப்பட்டவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும்போது பொடா மறு ஆய்வுக் குழுஅதில் தலையிட முடியாது என்றரீதியில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் அத்வானியிடம்தரப்பட்டுள்ள இந்த மனு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பொடாவையே ரத்து செய்ய வேண்டும் என்ற திமுகவின் நிலையிலும் மாற்றம் ஏற்படலாம் என்றுதெரிகிறது. பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்பட்டு, மாநில அரசு அந்தச் சட்டத்தைதவறாக பயன்படுத்தவே முடியாத என்ற சூழல் உருவாக்கப்பட்டால் அதை திமுக ஏற்றுக் கொள்ளலாம் என்றுகூறப்படுகிறது.

இந்தச் சட்டத்தைக் காரணமாக வைத்து பா.ஜ.கவுடன் திமுகவுக்கு மோதல் தீவிரமானது. இப்போது உறவுகளை சீர்செய்ய இரு தரப்பிலும் முயற்சி நடப்பதால் இந்த மனுவை திமுக தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொடா குழுவுக்கு கூடுதல் அதிகாரம் தரும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ள நிலையில் திமுகஇக் கோரிக்கையை வைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டால்,வரும் 15ம் தேதி திமுக நடத்தத் திட்டமிட்டுள்ள போராட்டம் கூட வாபஸாகலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+