திமுக மறியலுக்கு அனுமதி இல்லை: ஊர்வலம் நடத்தலாம்- உயர் நீதிமன்றம்
சென்னை:
பொடாவை எதிர்த்தும், மாநில அரசை கண்டித்தும் வரும் 15ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல், முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்குப் பதில் ஊர்வலம் நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
இருப்பினும் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடக்கும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
வரும் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மறியல் அறப்போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
போராட்டத்தை ஒடுக்க முன்னெச்சரிக்கை என்ற பெயரில் திமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்யமுயன்றனர். இதை எதிர்த்து அக் கட்சியின் பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
திமுக தொண்டர்களை முன் கூட்டியே கைது செய்வதை தடை செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்நேற்று முன்தினம் இந்தக் கைதுக்கு இடைக்காலத் தடை விதித்தது. நேற்று இந்த மனு மீது இறுதித் தீர்ப்புவழங்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள்முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இதன் மூலம் ஊழியர்கள் பணிக்குச் செல்வதில்பாதிப்பு ஏற்படும்.
வர்களது கடமையை தடுக்கும் செயலாகவே முற்றுகை, மறியல் போராட்டம் அமையும்.
எனவே, அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தலாம். அதற்கு காவல்துறையும் அனுமதி அளிக்கலாம்.வன்முறையைத் தூண்டாத வகையில் கோஷமிட்டவாறு ஊர்வலம் செல்ல காவல்துறை அனுமதிக்கலாம்.
காவல்துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைதியான வகையில், யாருக்கும் எந்தத் தீங்கும் நேராத வகையில்ஊர்வலம் நடத்தலாம்.
எந்த இடத்திலிருந்து ஊர்வலம் தொடங்க வேண்டும் என்பதை காவல்துறை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் ஊர்வலத்தினர் செல்ல வேண்டும்.
ஊர்வலத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இன்று இரவுக்குள் மனுதாரரிடம் போலீசார்தெரியப்படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் திமுகவினரை அவர்களது வீடுகளுக்கு சென்று கைது செய்யக்கூடாது. ஆனால் பொது இடத்தில் ஏதாவது நடந்தால் அவர்களைக் கைது செய்யலாம் என்று நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications