திட்டமிட்டபடி மறியல் நடக்கும்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
மறியல் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றத்தின் தடை விதித்திருந்தாலும் திட்டமிட்டபடி அமைதியான முறையில் மறியல் நடக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
காந்தி காலம் தொட்டு அண்ணா காலம் வரை மேற்கொள்ளப்பட்ட அறவழியில் வருகிற 15ம் தேதி திட்டமிட்டபடிஅமைதியான முறையில் மறியல் போராட்டம் நடைபெறும்.
மறியல் போராட்டத்தை காந்தி காலம் முதல் ஆட்சியாளர்களோ, நீதிமன்றங்களோ ஏற்றதில்லை என்பதை மக்கள்அறிவார்கள்.
சட்டம் அனுமதிக்காது என்று தெரிந்தேதான் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறை சென்றார்அண்ணா.சி.பா. ஆதித்தனார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மக்களின் கோரிக்கையை எடுத்துரைக்க வேறு வழியின்றிதான், சத்தியாகிரக மறியல் என்ற பெயரில் காந்தி காலம்முதல் அண்ணா காலம் வரை, நானும், பேராசிரயர் அன்பழகனும், லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும்பலமுறை சிறை கண்டுள்ளோம்.
இப்போது, தமிழை செம்மொழியாக்குவது, மத்தியில் ஆட்சி மொழியாக்குவது, எஸ்மா, டெஸ்மா, பொடாசட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போரில் ஈடுபடவுள்ளோம்.
இதில் எந்த மாற்றம் இல்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து, அமைதியான முறையில் மறியல் அறப்போரை நடத்திட திமுகவினர் அணிவகுத்திட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
நேற்றிரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், மறியல் நடத்தாமல் ஊர்வலம் நடத்தலாம் என உயர் நீதிமன்றம்தெரிவித்துள்ள கருத்துக்கள் வெறும் அப்சர்வஷேன் தான். அவை உத்தரவு அல்ல. எனவே திட்டமிட்டபடி மறியல்,முற்றுகைப் போராட்டம் நடக்கும்.
பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், அரசுப் பணிக்கும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் போராட்டம்நடக்கும். இதற்கு திமுக தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications