மலேசியாவில் தவிக்கும் மேலும் 16 இளைஞர்கள்: காக்க ஜெ. கோரிக்கை
சென்னை:
மலேசியாவில் வாடும் தமிழக மற்றும் ஆந்திர இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய்க்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய மற்றும் மாலத்தீவு சிறைகளில் அடைக்கப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 10 தமிழர்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா கடந்த வாரம் வாஜ்பாயிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந் நிலையில் மேலும் 16 தமிழக, ஆந்திர இளைஞர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இது குறித்து வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த சின்ஹா ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
வேலை தேடி மலேசியா சென்ற தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 16 இளைஞர்கள் வேலையின்றி துயரமான நிலையில் கோயிலில் தங்கியுள்ளனர். சாப்பிடுவதற்கும் காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியா திரும்ப விரும்புவதாக அவர்கள் விருப்பம் தெரிவித்த பின்பும் தூதரக அதிகாரிகள் அவர்களை அலைக்கழித்து வருகின்றனர், இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர்கள் முதலில் வேலை பார்த்த இடத்தில் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளப் பணத்தையும் அவர்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications