கள்ள சாராயம் குடித்தவர் சாவு, 3 பேர் உயிர் ஊசல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒரு கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.3 பேர் உயிர் ஊசலாடுகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரை தட்டப்பள்ளி என்ற இடத்தில் கூலித் தொழிலாளர்கள் சிலர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்தனர். இவர்களில் 4 பேர் மயங்கி விழுந்தனர்.
மயங்கி விழுந்தவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குநானன் என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மற்ற 3 பேரின் நிலையும் கவலைக்கிடமாக இருந்தது.இதையடுத்து அவர்கள் கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சமீபத்தில்தான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கள்ளச் சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாகஇறந்தனர். அந்த சம்பவத்தின் துயரம் மறைவதற்குள் சத்தியமங்கலத்தில் கள்ளச்சாராய சாவு நடந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications