வைகோ மனு: இன்றே விசாரிக்க கோரி நீதிபதியிடம் மனு?
சென்னை:
நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை இன்றே விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத்திடம் முறையிட மதிமுக வழக்கறிஞர்கள்முடிவுசெய்துள்ளனர்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ, நாடாளுமன்றத்தில்நடைபெறவுள்ள பொடா சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்குமாறுகோரி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மனுவை பொடா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் வைகோ. இதற்கு இன்றைக்குள் பதில்அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களிலும் நாடாளுமன்றத்தில் பொடா மறுஆய்வு திருத்தச் சட்டமசோதா மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளதால் மதிமுக எம்.பிக்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று கோரி மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வைகோவுக்கு கடிதம்எழுதியுள்ளார்.
இதையடுத்து இந்தக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, மேல் முறையீட்டு மனு மீது இன்றே தீர்ப்புவழங்குமாறு கோரி நீதிபதி குலசேகரனிடம் மனு கொடுக்க மதிமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை ஓட்டெடுப்பு நடைபெறுவதாக இருந்தாலும் கூட அதற்காக தயாராவதற்கு கால அவகாசம்தேவை என்பதால் இன்றே வைகோ மீதான தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரவுள்ளனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications