திமுகவின் போராட்டம் ஆரோக்கியமானதல்ல: பா.ஜ.க
சென்னை:
மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து கொண்டே, மத்திய அரசை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துவதுசரியல்ல என அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்து 300இடங்களைக் கைப்பற்ற முயற்சிக்கும். அதேபோல, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு இடம்கிடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
சமீபத்திய சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு பா.ஜக.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அனைத்துத தரப்புமக்களாலும் விரும்பப்படும் கட்சியாக பா.ஜ.க. மாறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மக்களால் நிராகக்கப்பட்டு விட்டது. ஆனால் அதை மறைக்கும் விதமாக அனைத்து மதச் சார்பற்றகட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் சோனியா.
காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க. அல்லாத 3-வது அணியை அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறார்.என்னைப் பொருத்தவரையில், பா.ஜ.க முன்னேறிக் கொண்டிருக்கிறது, காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந் நிலையில் 3-வது அணிக்கான வாய்ப்பே இல்லை.
பொடாவை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக திமுகவின் மறியல் போராட்டம் தேவையற்றது, இதுஆரோக்கியமானதல்ல. இதை ஏற்கனவே திமுக தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். போராட்டத்தைக் கைவிடுமாறுமறுபடியும் நான் கோரப் போவதில்லை.
வைகோ வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு பரிசீலனை செய்து வருகிறது. அது முடிந்தவுடன் விரைவில் அவர்விடுதலை செய்யப்படுவார் என்றார் வெங்கையா நாயுடு.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications