திமுக மறியல்: முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கைது
சென்னை:
பொடா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழை செம்மொழியாகவும், மத்தியில் ஆட்சி மொழியாகவும்அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் திமுகவினர் இன்றுமத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்றபோது முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இரு இடங்களிலும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மறியல் நடந்தது. சைதாப்பேட்டையில்நடந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை தாங்கினார். மெமோரியல் ஹால்பகுதியில் நடந்த போராட்டத்திற்கு சற்குண பாண்டியன் தலைமை தாங்கினார். இருவரின் தலைமையிலும்போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரம் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல, மதுரையில் மு.க.ஸ்டாலின், தஞ்சையில் கோ.சி.மணி, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், கோவையில்துரைமுருகன், திருச்சியில் கே.என்.நேரு, திருவண்ணாமலையில் பிச்சாண்டி, விழுப்புரத்தில் பொன்முடி,நாகர்கோவிலில் சுரேஷ் ராஜன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர்,எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட யாரும் ஜாமீன் கோர மாட்டார்கள் என்று ஏற்கனவே திமுக அறிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். சிறைகளில் போதிய இடம் இல்லாத காரணத்தால்பெரும்பாலானவர்கள் கல்யாண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
போராட்டம் அமைதியாக நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அழகிரியால் ஓரம்கட்டப்பட்ட ஸ்டாலினுக்கு கட்சியில் மீண்டும்முக்கியத்துவம் ஏற்படுத்த மதுரையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஸ்டாலினை கருணாநிதி களம்இறக்கியுள்ளார்.
மறியல் நடத்த வேண்டாம், மாறாக பேரணி நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்திட்டமிட்டபடி மறியல் போராட்டத்தை திமுக நடத்துகிறது என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications