"மப்"பில் மரம் ஏறியவர் இறங்க முடியாமல் தவிப்பு!
சென்னை:
குடிபோதையில் தென்னை மரத்தில் ஏறியவர்,இறங்க முடியாமல் கதறி அழுதார். இதையடுத்து அப் பகுதியைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் மரத்தில் ஏறி அவரை கீழே இறக்கி விட்டார்.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். மரம் ஏறும் தொழிலாளி. அப் பகுதி வீடுகளில் உள்ள தென்னைமரங்களில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்து வந்தார்.
நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு மதுக் கடைக்கு சென்று நன்றாக குடித்துள்ளார். பின்னர் போதையில்ராமகிருஷ்ண அய்யர் தெரு வழியாக வந்தபோது, அருண் பிரசாத் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர்அங்கிருந்த தென்னை மரத்தில் ஏறினார்.
வேகமாக ஏறியவர், ஏறி முடித்தபோது, போதை தலையைச் சுற்ற கீழே பார்த்துள்ளார்.அப்போதுதான் தான்மரத்தின் மீது அமர்ந்திருப்பதை உணர்ந்தார். அய்யய்யோ மரத்தில் ஏறி விட்டேன், இறங்க முடியவில்லையேஎன்று கூறி கதறி அழுதுள்ளார். இவரது கூக்குரலைக் கேட்ட அருண் பிரசாத் மற்றும் அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் மரத்தில் ஏறி கார்த்திகேயனை கீழே இறக்கிக்கொண்டு வந்தார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications