இனி ஆண்டுதோறும் 45 நாட்கள் யானைகள் முகாம்: ஜெ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதுமலை யானைகள் முகாம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதால், இனிமேல் ஆண்டுதோறும் 45 நாட்களுக்குயானைகளுக்கு சிறப்பு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை வன சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் கோவில் யானைகள், தனியார்யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடந்து வந்தது. நவம்பர் 15ம் தேதி தொடங்கிய இந்த முகாம் இன்றுடன்முடிவடைகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெ. அறிக்கை விவரம்:

முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாம் மிகப் பெரும் வெற்றியை அடைந்துள்ளது. எனவே இனி இதுஆண்டுதோறும் திட்டமிட்டு நடத்தப்படும்.

யானைகளுக்கு முகாம் அமைத்து புத்துணர்வு கொடுக்க டியாது, யானைகள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றன,முகாம் அமைத்தால் முதுமலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றெல்லாம் குரல் கொடுத்த போலிசுற்றுச்சூழல்வாதிகளின் பொய்ப் பிரசாரங்களை மீறி யானைகள் முகாம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதுசந்தோஷத்தைக் கொடுக்கிறது.

யானைகளுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு அவற்றின் பால் நான் காட்டிய பரிவுக்கு எதிர்ப்புதெரிவித்தவர்கள் இன்று வெட்கித் தலை குனிவார்கள். டி.ஆர்.பாலு போன்றவர்களின் சிறுபிள்ளைத்தனமானஎதிர்ப்புகளால் இந்த முகாம் தோல்வியடையவில்லை என்பதை முதுமலை முகாம் நிரூபித்திருக்கிறது.

யானைகளின் மன நலம், உடல் நலம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கத்தான் இந்த முகாம் நடத்தப்பட்டது.முதுமலை முகாமின் வெற்றியைத் தொடர்ந்து இனிமேல் இது ஆண்டுதோறும் நடத்தப்படும், 30 நாட்களுக்குபதிலாக 45 நாட்களுக்கு முகாம் நடத்தப்படும்.

மேலும், முகாமுக்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விடும். இதன் மூலம் மாநிலத்தின் அனைத்துப்பகுதியிலும் உள்ள யானைகள் முதுமலைக்கு வந்து சேர போதுமான கால அவகாசம் கிடைக்கும்.

இந்த முகாமுக்கு தங்களது யானைகளை அனுப்ப மறுத்த மடங்கள், தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக அடுத்தமுகாமுக்கு தங்களது யானைகளை அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

இன்று முதல் சம்பா நெல் கொள்முதல்: ஜெ.

காவிரி டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் இன்று முதல் சம்பா நெல் கொள்முதல் பணி தொடங்குவதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன் நிறுவனம் மூலம் காவிரி டெல்டாமாவட்டங்களில் நேரடி கொள்முதல் நடைபெறும்.

சென்னை, நீலகிரி தவிர பிற மாவட்டங்களில் சிவில் சப்ளைஸ் கார்பரேஷனின் டிப்போக்கள் மூலம் கொள்முதல் நடைபெறும்.சாதாரண நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ரூ. 550 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏ கிரேட் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 580 விலைநிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+