வீரப்பன் சுற்றிவளைப்பு: அதிரடிப்படை தகவல்
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் வீரப்பன்பிடிபடுவான் என்றும் சிறப்பு அதிரடிப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரப்பன் பதுங்கியுள்ள காட்டுப் பகுதிகளில் தற்போது பனி கொட்டுகிறது. மேலும் கடும் குளிரும் நிலவுகிறது.இதனால் வீரப்பனைப் பிடிப்பது எளிதாக இருக்கும் என்றும், வீரப்பன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல்கிடைத்துள்ளதால் அதிரடிப்படை வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டுள்ளதாகவும்,
அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் தலைமையில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும்,விரைவில் வீரப்பன் பிடிபடுவான் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் நேற்று காலை அதிரடிப் படை வீரர்களுக்கும், வீரப்பன் கும்பலுக்கும் துப்பாக்கிச் சண்டைநடந்ததாகக் கூறப்படுகிறது.
குளிர் காய்ச்சல், வண்டு கடியால் அதிரடிப்படையினர் அவதி
வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் உள்ள பல வீரர்களுக்கு குளிர் காய்ச்சல் வந்ததால் அவர்கள் சேலத்தில்உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படை வீரர்கள் தற்போது காட்டில் நிலவும் கடும் குளிர்காற்று,பனிப் பொழிவு ஆகியவற்றால் சிரமப்பட்டு வருகின்றனர். அத்தோடு காட்டு மரங்களில் உள்ள வண்டுகளின்கடியாலும் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.
மேட்டூர், அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள 170வீரர்கள் குளிர் காய்ச்சல் மற்றும் வண்டுக் கடியால் அவதிப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று சேலம்கொண்டு செல்லப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர்அனைவரும் மீண்டும் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications