கருணாநிதியின் 10 நிமிட உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கமிஷ்னர் அலுவலகம் முன்பு நேற்று மாலை உண்ணாவிரதம் இருக்க வந்த திமுக தலைவர் கருணாநிதி போலீஸாரின்சமாதானத்திற்குப் பின் தனது உண்ணாவிரதத்தை 10 நிமிடத்தில் முடித்துக் கொண்டார்.

தி.நகர் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டிலேயே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து,கமிஷ்னர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காக நேற்று மாலை 4.45மணிக்கு மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட திமுகவினருடன் கமிஷ்னர் அலுவலகம் முன்பு கருணாநிதி வந்தார்.

அவர் நாற்காலியில் உட்கார்ந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது சென்னை இணை கமிஷனர் சைலேந்திர பாபு வந்து கருணாநிதியிடம்,நாங்கள் அன்பழகனை வீட்டில் கைது செய்யவில்லை. சாலையில் அவர் வரும்போதுதான் கைது செய்தோம்.

இப்போது அவர் நீதிமன்றக் காவலில் இருப்பதால் அவரை விடுவிக்க இயலாது. அன்பழகனை ஜாமீனில் விடுவிக்கமுயற்சித்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றார்.

இதனையடுத்து கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவர் மொத்தம் 10 நிமிடங்களேஉண்ணாவிரதம் இருந்தார்.

வீட்டில்தான் கைது செய்தனர்: அன்பழகன்

இதற்கிடையே அன்பழகன் எம்.எல்.ஏ சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கைதுசெய்த போலீஸார், இப்போது சாலையில் கைது செய்ததாகக் கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவைஅவமதிக்கும் வகையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னைக் கைது செய்துள்ளனர்.

எனக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவ வசதி தேவை. சிறையில் சிறப்புப் பிரிவு வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மருத்துவ வசதிக்குத் தனியாக மனுத் தாக்கல்செய்யவேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து அன்பழகன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

வீட்டில்தான் கைது செய்தனர்: அன்பழகன்

இதற்கிடையே அன்பழகன் எம்.எல்.ஏ சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை கைதுசெய்த போலீஸார், இப்போது சாலையில் கைது செய்ததாகக் கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவைஅவமதிக்கும் வகையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னைக் கைது செய்துள்ளனர்.

எனக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவ வசதி தேவை. சிறையில் சிறப்புப் பிரிவு வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மருத்துவ வசதிக்குத் தனியாக மனுத் தாக்கல்செய்யவேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து அன்பழகன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந் நிலையில் இன்று காலை சென்னை சைதாப்பேட்டை17வது குற்றவியல் நீதிமன்றத்தில் அன்பழகன் சார்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றநீதிபதி விஜயகாந்த் அன்பழகனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+