பொடா சட்டத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி:
பொடா சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் மற்றும்மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. வைகோவின்பேச்சு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறி அவரது விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் மறைமுக ஆதரவுதெரிவித்துள்ளது.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டன.
பொடா சட்டத்தின் 21 (3)வது பிரிவின் கீழ் வைகோ மீது வழக்குத் தொடரப்படுள்ளது. இப் பிரிவின்படி தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது குற்றமாகும். இந்தப் பிரிவை எதிர்த்துதான் வைகோ உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை மூன்று வாரம் தொடர்ந்து நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி, தீர்ப்பைஒத்தி வைத்து நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
பொடா சட்டத் திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலைபொடா வழக்கு சம்பந்தமான தீர்ப்பு வெளியாகியது. இதில் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தாக்கல்செய்திருந்த மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாத சக்திகளை ஆதரித்துப் பேசுவதற்கான கருத்துச் சுதந்திரத்தைஅரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தார்மீக ஆதரவுதருவது பொடா சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற அட்டார்னி ஜெனரல் சொலி சொராப்ஜியின்வாதத்தை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
வைகோ மீதான வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் பொறுப்பு பொடா சிறப்பு நீதிமன்றத்தைச் சார்ந்தது. அதில்நாங்கள் தலையிட விரும்பவில்லை.
பொடா வழக்கில் கைதானவர்கள் ஓராண்டு சிறைக்காவலுக்குப் பின், பெயிலில் செல்ல அனுமதிக்கலாம் என்றஅட்டார்னி ஜெனரலின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் பொடா மறுஆய்வுக் குழு வரும் 22ம் தேதி கூடுகிறது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்இருக்கும்போது, அதில் பொடா மறுஆய்வுக் குழு தலையிடக் கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்தமனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு பொடா குழு கேட்டிருந்தது.
மத்திய அரசின் பதில் 22ம் தேதிக்குள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வைகோவிடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவரும்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications