ஸ்பிக் பங்கு பத்திர ஊழல்: சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ. நாளை ஆஜர்
சென்னை:
அரசுக்குச் சொந்தமான ஸ்பிக் நிறுவன பங்குகளை அரசுக்கு நட்டம் ஏற்படும் வகையில் மிகக் குறைந்த விலையில்விற்றதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடரப்பட்ட வழக்கில் நாளை அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
1991-1996ம் ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது, தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வசமிருந்த ஸ்பிக் நிறுவனபங்குகளை அந்த நிறுவனத்திற்கே அரசு விற்றது.
இதனையடுத்து ஸ்பிக் பங்குகள் அடிமாட்டு விலைக்கு ஜெயலலிதாவால் விற்கப்பட்டதாகவும், இதனால் தமிழகஅரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி பிரச்சனை எழுப்பினார்.
இதன் பின்னர் ஜெயலலிதா, அப்போது தொழில் துறை செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர்முத்தையா ஆகியோர் மீது மத்திய புலனாய்வுத் துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டது.
விசாரணையின் முடிவில், அரசுக்கு ரூ.28.29 கோடி நட்டம் ஏற்படும் வகையில் அடிமாட்டு விலைக்கு ஸ்பிக்பங்குகளை விற்றதாக மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பு சாட்சியங்கள் மீதான குறுக்கு விசாரணை முடிந்து, கடந்த 5ம் தேதி முத்தையாவும், ராமச்சந்திரனும்நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந் நிலையில் வழக்கின் பிரதானகுற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா நாளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகிறார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications