உச்ச நீதிமன்ற உத்தரவு: ஜாமீனில் வெளிவர வைகோவுக்கு வாய்ப்பு
சென்னை:
தீவிரவாத இயக்கத்துக்கு வாய்மொழியில் ஆதரவு தருவது பொடா சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருத முடியாது எனஉச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளதால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் வெளிவரவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
ஆனால், நான் ஜாமீன் கோர மாட்டேன் என வைகோ ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். பொடா சட்டத்தின்20, 21வது பிரிவுகளின் கீழ் தான் வைகோ கைதாகியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்தின்படிஇப்போதையே சூழலில் அவர் ஜாமீன் கோர முடியும் என சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் பெற அவர் விரும்பினால், பொடா சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் பொடா சட்டத்தில் கைதானவர் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர் ஜாமீன் பெற தகுதியானவரேஎன்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வைகோ உள்ளே போய் ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
கவலையில்லை: வைகோ
இதற்கிடையே நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தடைவிதித்தது குறித்துக் கவலைப்படவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ தோல்விகளைச்சந்தித்துள்ளேன். இது மற்றொரு தோல்வி என்று வைகோ கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பொடா சட்டத் திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பில் கலந்துகொள்ள அனுமதிகோயிருந்தார். இதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி குலசேகரன் அனுமதி வழங்கினார். ஆனால், டிவிஷன் பெஞ்ச்நீதிபதிகள் சிர்புர்கர், கண்ணதாசன் ஆகியோர் இதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பொடா நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட வைகோவிடம் இத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,முகத்தில் கொஞ்சம் கூட ஏமாற்றமே தெரியாமல் வைகோ பதிலளித்தார். எனது அரசியல் வாழ்க்கையில்எத்தனையோ தோல்விகளை சந்தித்துள்ளேன். இது இன்னொரு தோல்வி அவ்வளவுதான்.
நீதிபதி குலசேகரன் உத்தரவு குறித்து அறிந்ததும், நாடாளுமன்ற விவாதம் தொடர்பாக எனது பேச்சை தயார்செய்யத் தொடங்கினேன். அப்போது சில வார்டர்கள் வந்து, சிறைக்கு வெளியே சில வாகனங்கள்வந்துள்ளதாகவும், என்னை எப்போது வேண்டுமானாலும் டெல்லிக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும்தெரிவித்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்த அவர்கள், வாகனங்கள் அனைத்தும் போய் விட்டதாகவும், எனதுமனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்கள். இரண்டையும் நான் ஒரே மனோபாவத்தில்தான் எடுத்துக்கொண்டேன் என்றார் வைகோ.
பொடா சட்ட திருத்தம் நிறைவேறியது:
இந் நிலையில் பொடா சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. வாக்கெடுப்பை காங்கிரஸ், இடதுசாரிகள்உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அதிமுக மத்திய அரசிற்கு எதிராக ஓட்டளித்தது.
திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. முன்னதாக இந்தச் சட்டத்தையேவாபஸ் பெற வேண்டும் என்று திமுக மத்திய அமைச்சர் பாலு பேசினார். இதை எதிர்த்து அதிமுக எம்.பி. மலைச்சாமிபேசினார்.
பொடா சட்ட திருத்தம் நிறைவேறியது:
இந் நிலையில் பொடா சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. வாக்கெடுப்பை காங்கிரஸ், இடதுசாரிகள்உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அதிமுக மத்திய அரசிற்கு எதிராக ஓட்டளித்தது.
பொடா வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும்அதிகாரம் மறுஆய்வுக் குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று திமுக- மதிமுக கட்சிகள் வலியுறுத்தின. இதனைஅத்வானி ஏற்றுக் கொண்டதையடுத்து, திமுக, மதிமுக, பா.ம.க. ஆகியவை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவாக்களித்தன.
முன்னதாக இந்தச் சட்டத்தையே வாபஸ் பெற வேண்டும் என்று திமுக மத்திய அமைச்சர் பாலு பேசினார். இதைஎதிர்த்து அதிமுக எம்.பி. மலைச்சாமி பேசினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications