காவிரி பாசனம்: மேட்டூரிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடஉத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தண்ணீர் திறந்து விடச் சொல்லி விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, விநாடிக்கு 5,000 கன அடி நீர்திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு,விவசாயிகள் சிக்கனமாக நீரைச் செலவழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
விவசாயிகள் போராட்டம்:
முன்னதாக தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் இன்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரசுப் பேருந்துகள்சிறை பிடிக்கப்பட்டன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியிருப்பதால் உடனடியாகமேட்டூர் அணையைத் திறக்கக் கோரி தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
வடக்கூர் என்ற இடத்தில் நேற்று நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந் நிலையில்இன்று இரண்டாவது நாளாக பூதலூர் என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த சாலை வழியாக வந்த 10 அரசுப் பேருந்துகளையும் அவர்கள் சிறை பிடித்துக் கொண்டனர். மேலும்,உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீரைத் திறந்து விட்டால்தான் தங்களதுபயிர்களைக் காக்க முடியும் என்று அவர்கள் சமாதானம் பேச வந்த அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications