பழ. நெடுமாறன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
பொடா வழக்கில் கைதாகியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 4 பேரை ஜாமீனில்விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்,தாயப்பன், பாவாணன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில்அடைக்கப்பட்டனர்.
தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நெடுமாறன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு செய்திருந்தனர். இந் நிலையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்குத் தார்மீக ஆதரவு தருவதுபொடா சட்டப்பட்டி குற்றமாகாது,
ஒரு ஆண்டுக்கு மேல் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் சாதாரணநடைமுறைகளே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் அடிப்படையில் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிள் சிர்புர்கர் மற்றும்தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.இவர்கள் மீதுவேறு வழக்குகள் இல்லை என்பதால் இவர்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கொள்கை அடிப்படையில், இவர்கள் விடுதலைப் புலிகளைஆதரித்துப் பேசியது குற்றமா, இல்லையா என்பதைநீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறிய நீதிபதிகள் நான்கு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
நான்கு பேரும் ரூ.50,000க்கு இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நால்வரும் சென்னையை விட்டுவெளியே செல்லக் கூடாது என்றும், வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரும் முதல் நபர்கள்நெடுமாறன் உள்ளிட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக இவர்கள் சிறையில்வாடி வந்தனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications