ஜெ. சொத்துக் குவிப்பு: கர்நாடக அரசு , அன்பழகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றச் சொல்லி அவர் தாக்கல்செய்திருந்த மனு குறித்து தங்களது பதிலைத் தெரிவிக்குமாறு கர்நாடக அரசுக்கும், திமுக பொதுச் செயலாளர்அன்பழகனுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஜெயலலிதா மற்றும் அவர் தோழி சசிகலா மீது தொடரப்பட்டவழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்தமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றிஉத்தரவிட்டது.
இந் நிலையில், காவிரிப் பிரச்சனை, வீரப்பன் விவகாரம் ஆகியவற்றால் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும்இடையே சுமூகமான சூழ்நிலை இல்லை. இதனால் வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்கானசாத்தியங்கள் குறைவு.
எனவே வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந் நிலையில்தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று காலை நீதிபதி வரியாவா மற்றும் நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,ஜெயலலிதா மனு தொடர்பாக தங்களது பதிலைத் தெரிவிக்குமாறு கர்நாடக அரசுக்கும், அன்பழகனுக்கும்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தீர்ப்பில், தங்களது பதிலை கர்நாடக அரசும், அன்பழகனும் ஜனவரி 19ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். வழக்குஜனவரி 19ம் தேதி விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அதே நேரத்தில் வழக்குத்தொடர்பான ஆவணங்களை தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழி மாற்றம் செய்யும் பணி தொடர்ந்துநடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை எங்கு அமைப்பது என்பதில் கர்நாடக அரசுமுடிவெடுக்க முடியாமல் இன்னும் குழப்பத்தில் உள்ளது.
பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகம், சிவில் நீதிமன்ற வளாகம் தவிர பீனியாவில் நீதிமன்றத்தைஅமைக்கலாமா என்றும் கர்நாடகம் யோசித்து வருகிறது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications