ஸ்பிக் ஊழல்: ஜெ. இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்
சென்னை:
அரசுக்குச் சொந்தமான ஸ்பிக் நிறுவன பங்குகளை அரசுக்கு நட்டம் ஏற்படும் வகையில் மிகக் குறைந்த விலையில்விற்றதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடரப்பட்ட வழக்கில் இன்று அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி,நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
1991-1996ம் ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது, தமிழக அரசு நிறுவனமான ‘டிட்கோ’ வசமிருந்த ‘ஸ்பிக்’ நிறுவனபங்குகளை அந்த நிறுவனத்திற்கே அரசு விற்றது.
இதனையடுத்து ‘ஸ்பிக்’ பங்குகள் அடிமாட்டு விலைக்கு ஜெயலலிதாவால் விற்கப்பட்டதாகவும், இதனால் தமிழகஅரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி பிரச்சனை எழுப்பினார்.
இதன் பின்னர் ஜெயலலிதா, அப்போது தொழில் துறை செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் ஸ்பிக் நிறுவனதலைவர் முத்தையா ஆகியோர் மீது மத்திய புலனாய்வுத் துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொண்டது.
விசாரணையின் முடிவில், அரசுக்கு ரூ.28.29 கோடி நட்டம் ஏற்படும் வகையில் அடிமாட்டு விலைக்கு ‘ஸ்பிக்’பங்குகளை விற்றதாக மூவர் மீதும் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பு சாட்சியங்கள் மீதான குறுக்கு விசாரணை முடிந்து, கடந்த 5ம் தேதி முத்தையாவும், ராமச்சந்திரனும்நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந் நிலையில் வழக்கின் பிரதானகுற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா இன்று காலை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காகஆஜரானார்.
ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வந்ததையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிபதிராஜமாணிக்கம் கேட்ட கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார்.
ஸ்பிக் ஊழல் வெளியே தெரிய வந்ததால்தான் ஜனதாக் கட்சியைச் சேர்ந்த சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டதுஎன ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருப்பது குறித்து நீதிபதி கேட்ட கேள்விக்குஜெயலலிதா மறுப்புத் தெரிவித்தார். ஸ்பிக் பங்குகளை விற்றதால் அரசுக்கு நட்டம் இல்லை என்றும் கூறினார்.
பின்னர் வழக்கு குறித்து தனது விளக்கத்தை எழுத்து மூலம் தாக்கல் செய்யவிருப்பதாக ஜெயலலிதாகூறியதையடுத்து, அவரது வழக்கறிஞர் எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்தார். ஜெயலலிதா தவிர இந்த வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட ராஜமாணிக்கம், ஏ.சி.முத்தையா உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். பின்னர்வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications