அதிமுக எம்.பியின் மனைவி, மகள்கள் அட்டகாசம்: துணை நடிகர் மீது தாக்குதல்!
சென்னை:
| துணை நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக எம்.பி. தலித் எழில்மலையின் மனைவி, மகள் உள்ளிட்ட6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்தவர் தலித் எழில்மலை.பின்னர் அதிமுகவுக்குத் தாவி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பியானார். |
இந்த வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பங்களாவில் சத்யராஜ், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிக்கும்அடிதடி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹாடோஸ் சாலைக்கு தனது மோட்டார் சைக்கிளில்வந்து கொண்டிருந்தார் வீரமணி என்ற துணை நடிகர். தலித் எழில்மலையின் வீட்டின் அருகேவந்தபோது, செல்போன் ஒலிக்கவே வண்டியை நிறுத்திப் பேசினார்.
அப்போது தலித் எழில்மலையின் மனைவி ரத்னம்மாள், வாசலில் நின்று போன் எல்லாம் பேசக்கூடாது என்று வீரமணியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நான் வாசலில் நிற்கவில்லை. ரோட்டில்நின்று தான் பேசுகிறேன் என்று பதில் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரத்னம்மாள் கேட்டைத் திறந்து கொண்டு வேகமாக வந்து வீரமணியைப்பார்த்து அடிப்பது போல படு ஆவேசமாக பேசினார். உடனே அவரது மகள் எழில் காத்தரினும்தாயாருடன் சேர்ந்து கொண்டு வீரமணியை வாடா, போடா என்று ஒருமையில் விளித்து மோசமானவார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அவரது வீட்டில் இருந்த மேலும் சில பெண்களும் அங்கு வந்து வீரமணியை தாக்க ஆரம்பித்தனர்.
பின்னர் வீரமணியின் மோட்டார் சைக்கிளை தங்களது வீட்டுக்குள் கொண்டு சென்ற அந்தப்பெண்கள், அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட், தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர்.
வீரமணி தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த மற்ற துணைநடிகர்கள் வீரமணிக்கு ஆதரவாக திரண்டனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் வீரமணிக்குஆதரவாக அங்கு கூடினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தலித் எழில்மலையின் வீட்டுக்குள்ளிருந்த சிலபெண்கள் துப்பாக்கியை எடுத்துக் காட்டி சுட்டு விடுவதாக கூட்டத்தினரை மிரட்டினர்.
இந் நிலையில் படப்பிடிப்பில் இருந்த நடிகர்கள் சத்யராஜ், நெப்போலியன் ஆகியோர் அங்குவிரைந்து தலித் எழில்மலையின் குடும்பத்தினரையும், துணை நடிகர்களையும் சமாதானப்படுத்தினர்.
ஆனால், அப்போது அங்கு வந்த எழில்மலையின் இன்னொரு மகளான வழக்கறிஞர் எழில்கரோலின், இதில் நீங்கள் தலையிடக் கூடாது என்று கூறி சத்யராஜ், நெப்போலியனைத் திட்டினார்.மேலும் அவர்களையும் ஒருமையில் பேசினார்.
இதையடுத்து நெப்போலியன் அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் துணை நடிகர்களும்,பொது மக்களும் தெருவில் அமர்ந்தனர்.
இந்தச் சம்பவத்தால் ஹாடோஸ் சாலை பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
தாக்கப்பட்ட துணை நடிகர் வீரமணியும் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வாழ்க்கையிலேயே பெண்கள் கூட இவ்வளவு ஆபாசமாகபேசுவார்கள் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன். இதுபோன்ற பெண்களை நான் பார்த்ததேஇல்லை என்றார்.
சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளனர்.
இதையடுத்து தலித் எழில்மலையின் மகள்கள் மற்றும் அவரது மனைவியை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
வீரமணி மீது தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, ஆபாசமாகப் பேசி பொருட்களை பறித்தது,துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தலித் எழில்மலையின் மனைவி ரத்னம்மாள், மகள்எழில் கரோலினா உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல வீரமணி மீது அத்துமீறி நுழைந்தது, சட்டவிரோதமாக கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ













Click it and Unblock the Notifications