கூட்டணி குறித்து நாளை திமுக முக்கிய முடிவு: போனால் போகலாம் என்கிறது பா.ஜ.க
சென்னை & காரைக்குடி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகினால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள்போனால் போகட்டும் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் ராஜா கூறியுள்ளார்.
பா.ஜ.கவுடன் கூட்டணியில் தொடர்வது குறித்து திமுக உயர்மட்டக் குழு நாளை சென்னையில் கூடி முடிவெடுக்கஉள்ளது. அண்ணா அறிவாலயத்தில் காலை 9.30 மணிக்கு திமுக தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள்உள்ளிட்டோர் கருணாநிதி தலைமையில் சந்தித்து முக்கிய முடிவெடுக்கவுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிட்டு வெளியில் இருந்து ஆதரவு தரலாமா, அல்லது மொத்தமாகபா.ஜ.கவை கை கழுவலாமா என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் திமுகவுடன் மோதலுக்கு பா.ஜ.கவும் தயாராகி வருகிறது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜாநிருபர்களிடம் கூறுகையில்,
சுய லாபத்திற்காக மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவர்களதுபோராட்டம் குறித்து பா.ஜ.க தலைவர் வெங்கய்யா நாயுடு கூறிய கருத்தில் எந்தத் தவறோ, உள்நோக்கமோஇல்லை. ஆனால், அதற்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதிலில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.
கூட்டணியில் இருந்து கொண்டே போராட்டம் நடத்தினார்கள். இப்போது கூட்டணி குறித்து உயர் மட்டக் குழு கூடிமுடிவெடுக்கும் என்று கூறுவது வேடிக்கையானது. திமுக விலகினால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. அவர்கள் விலகினால் விலகட்டும்.
மத்திய அரசை எதிர்த்து திமுக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தபோதிலும், அது மத்திய அமைச்சர்பாலுவுக்கு எதிரான போராட்டமாகவே நாங்கள் கருதுகிறோம் என்றார்.
ராதாகிருஷ்ணன் பேட்டி:
சென்னையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க எம்.பி ராதாகிருஷ்ணன்,
திமுகவின் போராட்டம் குறித்து வெங்கைய்யா நாயுடு கூறியதில் தவறில்லை. கூட்டணி தொடர வேண்டும்என்பதுதான் எங்களது விருப்பம். திமுகவின் முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேசிய ஜனநாயக் கூட்டணியிலுள்ள திமுகதான் தங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கவேண்டும் என்றகேவலமான நிலையில்தான் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளன.
தமிழகத்தில் நீதித் துறையில் தலையீடு இருப்பதாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதற்காக முதல்வர்ஜெயலலிதா பதவி விலக வேண்டியது இல்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications