For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடங்கியது ஜெவின் நேர்காணல்: பதற்றத்தில் அதிமுக நிர்வாகிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக நிர்வாகிகளுடனான நேர்காணலை முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் தொடங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வென்று காட்ட வேண்டும்என அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடுவார் என்று தெரிகிறது. மேலும் தேர்தலுக்கு இப்போதிருந்தேஅதிமுகவினரை தயார்படுத்தவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

40ல் 30 இடங்களுக்குக் குறையாமல் பிடித்தால் மத்தியில் அடுத்து அமையும் ஆட்சியில் தன்னால் முக்கிய பங்காற்றமுடியும் என ஜெயலலிதா நம்புகிறார். 40க்கு 40யையும் பிடித்தால் பிரதமர் அல்லது துணைப் பிரதமர் பதவியைப்பிடிக்கலாம் என்றும் நினைககிறார்.

அனைத்துத் தொகுதிகளிலும் வெல்ல, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுக்குஉத்தரவிடும் வகையில் இந்த நேர்காணல் நிகழ்ச்சியை ஜெயலலிதா நடத்துகிறார்.

இதற்காக சென்னை புறநகரான வண்டலூர் அருகே கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி கிராம எல்லையில்பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு குடிநீர் குழாய் இணைப்புகள், மின்சார இணைப்புக்காகபிரம்மாண்டமான டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

நேரடி ஒளிபரப்பிற்காக 1,200 தொலைக்காட்சிப் பெட்டிகளும், அதிமுகவினர் தங்கள் புகார்களைத் தெரிவிக்க 25புகார்ப் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நிர்வாகிகள் குறித்த தங்களது புகார்களை முதல்வரிடம்தெரிவிக்க இயலும் என்பதால் நிர்வாகிகள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.

2,000க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மாநாடு போல நடக்கவுள்ள இந்த நேர் காணல் நிகழ்ச்சியில் தினசரி குறிப்பிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள்ஜெயலலிதாவை சந்தித்து தங்களது மாவட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில்அந்தந்த மாவட்டத்தில் கட்சிக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கவுள்ளனர்.

முதல் நாளான இன்று தூத்துக்குடி, தூத்துக்குடி வடக்கு, கன்னியாகுமரி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு மற்றும்கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் 13,000 பேரை ஜெயலலிதா சந்திக்கிறார். அனைவருக்கும்தேவையான உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4ம் தேதி வரை இந்த நேர்காணல் நடக்கும். அன்றைய தினம் நெல்லை புறநகர் கிழக்கு, நெல்லைபுறநகர், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளை ஜெயலலிதா சந்திக்கிறார்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் முதல்வரிடம் நிர்வாகிகள்மனம் விட்டுக் கூறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லாரிகளுக்கு தடை:

இந்த அதிமுக நிகழ்ச்சியையொட்டி தாம்பரம் ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் லாரிகள், கன ரக வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜல்லி, கல் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் பல குவாரிகள் உள்ளன. இங்கு பணிகள்நடந்தால் தூசி பறக்கும் என்பதால் மாசுக் கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் மூலம் அந்தப் பணிகளை முடக்கும் முயற்சியிலும் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X