நெடுமாறன் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதைஎதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தததோடு, தமிழகஅரசுக்கு கடும் கண்டணத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெடுமாறன் உள்ளிட்ட தமிழர் தேசிய இயக்கத்தினர் நான்கு பேருக்கு பொடா வழக்கில் ஜாமீன் வழங்கியதுசென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனுவில், நெடுமாறன் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்குத் தனது ஆதரவைத்தொடர்ந்து அளித்து வருபவர். அவரை ஜாமீனில் விடுவித்தால், சாட்சியங்களைக் கலைக்க அவர் முயலக்கூடும்.எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி லட்சுமணன், நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதோடு தங்களது கடுமையான கண்டனத்தையும்தமிழக அரசுக்குத தெரிவித்தனர்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
இந்த வழக்குத் தொடர்பான விபரங்களை நாங்கள் ஆராய்ந்தோம். பொடா வழக்குக்கு எதிராக வைகோ,நெடுமாறன் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக நாங்கள் வழங்கிய தீர்ப்பை ஆதரமாகக்கொண்டே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஜாமீனை வழங்கியுள்ளது.
எனவே, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நாங்கள் தலைையிட வேண்டியதே இல்லை. ஒவவொரு வழக்கிலும்தமிழக அரசு இப்படித்தான் மேல்முறையீடு செய்கிறது.
ஜனநாயக நாட்டில் அரசியல்வாதியாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக் கொள்கை இருக்கலாம். அந்தஉரிமையை மறுக்க முயல்கிறதா தமிழக அரசு?
தேவையில்லாமல் இந்த விஷயத்தை தமிழக அரசு ஊதிப் பெரிதாக்குகிறது. நெடுமாறனுக்கு ஜாமீன் தரப்பட்டால்என்ன ஆகப் போகிறது?. ஏதோ பெரிய பீதியை உருவாக்க தமிழக அரசு முயல்வது சரியல்ல.
தமிழகத்தில் பொடா சட்டம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில்நெடுமாறன் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு குறித்தும் நாங்கள் விசாரணைநடத்துவோம் என்றனர் நீதிபதிகள்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் ஜாமீனை மறுக்கப் போய் உச்ச நீதிமன்றத்திடம் குட்டுவாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது தமிழக அரசு.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications