தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து திமுக விலகல்: அமைச்சர்கள் ராஜினாமா- கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் விலகுவதாக திமுக இன்று அறிவித்தது.
அதே நேரத்தில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து, பிரச்சனை அடிப்படையில்(issue based) ஆதரவு தரப்படும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
துணைப் பிரதமர் அத்வானியின் சீடகோடியான வெங்கைய்யா நாயுடுவின் ஆரோக்கிய அரசியல் கமெண்ட்டைத்தொடர்ந்து பா.ஜ.கவின் வுடனான கூட்டணி குறித்து மறு ஆய்வு செய்ய திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழுவின் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கருணாநிதி கூட்டினார்.
இக் கூட்டத்தில் பேசிய அனைத்து திமுக நிர்வாகிகளும் பா.ஜ.கவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் எனவலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிவிட்டு, வாஜ்பாய்க்கு பிரச்சனைஅடிப்படையில், வெளியில் இருந்து ஆதரவு தருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
பொடா சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய போராட்டம் ஆரோக்கியமானதல்ல என்று பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு கூறியிருக்கிறார். பா.ஜ.கவின் ஆரோக்கியமான அரசியலுக்கு நாங்கள் இடைஞ்சலாகஇருக்க விரும்பவில்லை. இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.
அதே போல திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துப் பார்ப்பதாக பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர்கூறியிருக்கிறார். அதை பா.ஜ.க. மத்திய அமைச்சரும் ஆதரித்துப் பேசியிருக்கிறார். முன்பு வாஜ்பாயின் அரசைக்கவிழ்த்ததே ஜெயலலிதா தான் என்பதையும் மறந்துவிட்டு அந்தக் கட்சியை சட்டமன்றத்துக்கு உள்ளேயும்வெளியேயும் பா.ஜ.க. ஆதரித்து வந்தது.
எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே அதிமுக ஆதரித்து ஆரோக்கிமான அரசியல் நடத்தும் பா.ஜ.கவுடன்கூட்டு வைத்துக் கொண்டு இனயும் மத்தியில் அமைச்சர் பதவி வகிக்க திமுக விரும்பவில்லை.வரும் பிப்ரவரி 2ம் தேதி திமுகவின் தென் மண்டல மாநாடு நடக்கும்.
உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும் முதல்வர் பதவியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவை இக் கூட்டம்கண்டிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக கடந்த 2001ம் ஆண்டு முதலே மாநில பா.ஜகவினரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வந்தது.திமுகவின் கொள்கைகளும் செயல்களும் பா.ஜ.கவினரால் கிண்டலடிக்கப்பட்டு வந்தன. அதே நேரத்தில் முதல்வர்ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்றத் தடைச் சட்டம், பலியிடுதலுக்குத் தடை ஆகியவற்றை ஆதரித்ததோடுஅதிமுகவுக்கு பா.ஜ.கவினர் எல்லா விஷயங்களிலும் ஆதரவு அளித்தே வந்தனர்.
கருணாநிதி கைது, மத்திய அமைச்சரகை இருந்த மாறனை போலீஸ் தாக்கியது, வைகோவை சிறையில் அடைத்ததுஎன ஜெயலலிதாவின் எந்த செயல்களையும் பா.ஜ.க. தலைமை கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தது.
ஆனால், அதையும் மீறித் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கூட்டணியில் திமுக இருந்தது வந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் திமுக கூட்டணியை பிரதமர் வாஜ்பாய் விரும்பினாலும், பா.ஜ.கவில் உள்ள அத்வானி கோஷ்டிஅதிமுகவை தொடர்ந்து ஆதரிக்கிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலமாக அத்வானியுடன் முதல்வர்ஜெயலலிதா மறைமுக கூட்டு அமைத்துள்ளதாக கருணாநிதி கருதுகிறார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications