பாளையங்கோட்டை சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் தப்பியோட்டம்: மூவர் மட்டும் சிக்கினர்
திருநெல்வேலி:
பாதுகாப்பு மிகுந்த பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் துணிகரமாகத் தப்பியோடினர். இவர்களில் 3 பேர் மட்டும் உடனடியாக பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ளமத்திய சிறையில் வெங்கடேசன், குமார், கோபால் உள்ளிட்ட 6 கொலை வழக்குக் கைதிகள் ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் மிக ரகசியமாக தங்களது அறையில் இருந்து சிறை வளாகம் வரை சுரங்கப் பாதை அமைத்து வந்துள்ளனர். இந் நிலையில் இன்று அதிகாலை 6 பேரும் சுரங்கப் பாதை வழியே அறையிலிருந்து வெளியேறினர்.
பின்னர் போர்வைகளை கயிறு போல கட்டி சிறையின் சுற்றுச் சுவர் மீது ஏறி தப்பினர்.
இவர்கள் தப்பியோடுவதைப் பார்த்த ஒரு வார்டர் அபாய மணியை ஒலிக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் கைதிகளை விரட்டிச் சென்றனர்.
இவர்களில் 3 பேர் மட்டும் சிக்கினர். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க நெல்லை மாவட்டம் முழுவதிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகள் தங்களது எதிரிகளை பழிவாங்கலாம் என்பதால் அவர்களது குடும்பத்தினர் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications