திண்டுக்கல் கோர்ட்டில் நெடுமாறன் ஜாமீன் மனு தாக்கல்
திண்டுக்கல்:
திண்டுக்கல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பொடாசட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் பொடா வழக்கில் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 4 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்வழங்கியுள்ளது. ஆனால் நெடுமாறன் மீது திண்டுக்கல் மற்றும் சென்னை ஆலந்தூர் நீதிமன்றங்களில் வழக்குகள்நிலுவையில் உள்ளதால் அவரால் உடனடியாக விடுதலையாக முடியவில்லை.
இந் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியது தொடர்பாக திண்டுக்கல் சார்பு நீதிமன்றத்தில்நெடுமாறன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் ஜாமீன் கோரி நெடுமாறன் சார்பில் அவரது வக்கீல்கள் கணேசன்,வெள்ளைச்சாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
அதேபோல ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இரு வழக்குகளிலும் நெடுமாறனுக்குஜாமீன் கிடைத்தால் அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார். கடந்த ஒரு வருடமாக நெடுமாறன் சிறையில் வாடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications