திருவாடுதுறை மடாதிபதியை கொல்ல முயன்ற வழக்கு: இளைய மடாதிபதிக்கு 3 ஆண்டு சிறை
மயிலாடுதுறை:
திருவாடுதுறை மடத்தின் மூத்த மடாதிபதியைக் கொல்ல முயன்ற வழக்கில், இளைய மடாதிபதிக்கு மூன்று ஆண்டுசிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கும்பகோணம் அருகே குத்தாலத்தில் உள்ளது இந்த நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மடம். சைவ ஆதீன மடங்களில்மிக பிரசித்தி பெற்றது. கோடிக்கணக்கான சொத்துக்களும், நிலங்களும், செல்வ வளமும் கொண்டது.
இதன் மடாதிபதியாக சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சன்னிதானம் இருந்து வருகிறார். இதன் இளையமடாதிபதியாக இருந்தவர் காசிவிஸ்வநாத பண்டார சன்னிதானம்
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மூத்த மடாதிபதியான சிவப்பிரகாச பரமாச்சாரியாரைக் கொல்ல முயற்சிநடந்தது. அவரது பூஜை அறைக்குள் நான்கு மர்ம மனிதர்கள் புகுந்து மறைந்திருந்தனர்.
ஆனால், அவரது உதவியாளர் அவர்களைப் பார்த்துவிட்டதால் நால்வரும் தப்பியோடிவிட்டனர். அவசரத்தில்அந்தக் கும்பல் விஷ மருந்து நிறைந்த சிரிஞ்சுகள், கையுறைகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.
பெரிய ஆதீனத்தை விஷ ஊசி பொட்டுக் கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துஉயர் மட்ட போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையின்போது இளைய மடாதிபதியின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில் அவர் சொல்லித் தான்மூத்த மடாதிபதிக்கு விஷ ஊசி போட நான்கு பேர் தயார் செய்யப்பட்டது உறுதியானது.
பெண், மது பித்தரான இளைய மடாதிபதி சென்னையில் சில நடிகைகளுடன் தங்கிவிட்டுப் போனது முதல்அனைத்து வண்டவாளங்களும் வெளியாயின. தனது சுகபோகமான வாழ்வுக்குத் தடையாக இருக்கும்மடாதிபதியைத் தீர்த்துக் கட்டிவிட்டு சொத்துக்களை முழுமையாக அபகரிக்கவே இந்த சதியை இளைய மடாதிபதிதீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கொலை செய்ய முயன்ற கூலிக் கும்பல் 11 பேரும்கைதாயினர்.
இச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார் மூத்த மடாதிபதி.
இக் கொலை வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிபாண்டியன் இன்று தீர்ப்பை வழக்கினார்.
இளைய சன்னிதானம் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட 11 பேருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2,000 அபராதமும் விதித்தார்.
தண்டனையையடுத்து இளையமடாதிபதி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்றேவிசாரிக்கப்படவுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications