காவிரி நீர் கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முற்றுகை: விவசாயிகள் அதிரடி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

காவிரியில் நீர் விடக் கோரி தஞ்சாவூர் ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கான விவசாயிகள்முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையை நம்பி நகைகளை, உடமைகளைஅடகு வைத்து அந்தப் பணத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சம்பா நெல் பயிரிட்டுள்ளனர்.

அதன் பின்னர் போதிய மழை இல்லை. மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரும் போதுமானதாக இல்லை.

காவிரியில் உடனடியாகத் தண்ணீர் வராவிட்டால் இந்தப் பயிர்கள் காய்ந்து போய் அவர்களது வாழ்வு மீண்டும்கேள்விக் குறியாகும் நிலைமை உருவாகியுள்ளது.

இந் நிலையில் கர்நாடகத்துடன் முறைத்துக் கொண்டுள்ள தமிழக அரசு தண்ணீர் பெறும் முயற்சிகள் எதையும்எடுக்கவில்லை. பிரதமர் வாஜ்பாயுடனான மோதால் காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தையும் கூட்ட தமிழகஅரசு முயலவில்லை.

இதனால் டெல்டா பகுதி விவசாயிகள், வாடும் சம்பா பயிரைக் காக்க மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்றுகோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு மேலும் 5,000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஆனால், இந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ள விவசாயிகள், இந்த நீர் கடைமடைப்பகுதிகளான திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டத்திற்கு வந்து சேரும் முன் சம்பா பயிர்கள் கருகி வீணாகிவிடும்என்றும் கூறுகின்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு குறைந்தது 10,000 கன அடி நீராவது திறந்து விடப்பட்டால் தான் பயிர்கள்தப்பும் என்று கூறுகின்றனர். இதை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந் நிலையில், இன்று காலை காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 21 கிராமங்களின் நூற்றுக்கணக்கானவிவசாயிகள் தஞ்சையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில்இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே காவிரி நீர் கோரி நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சுமார் 200விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர், நாகையில் 5,000 விவசாயிகள் கைது

அதே போல மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி டெல்டாப் பகுதியின் கடைமடை மாவட்டங்களான நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள்சாலை மறியல் செய்தனர்.

இதையடுத்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம் ஆகியோர் உள்ளிட்ட 5,000விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

விவசாயிகள் போராட்டத்தையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவசர ஆலோசனைக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+