வாஜ்பாய் பரிந்துரைப்படி டி.ஆர். பாலு, ராஜாவின் ராஜினாமாக்கள் ஏற்பு: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
டெல்லி:
திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுவின் முடிவுப்படி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தனர்.
இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவற்றை ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அனுப்பி வைத்தார்.இதையடுத்து பிரதமரின் பரிந்துரைப்படி ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்புவெளியிட்டுள்ளது.
முன்னதாக டி.ஆர்.பாலுவும் ராஜாவும் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துதங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு பேசுகையில், எங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்துவிட்டோம். நாங்கள் ராஜினாமா செய்தது குறித்து பிரதமர் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். ஏன் முன்பே தமிழகபாஜகவுடனான பிரச்சனைகளை என் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று கேட்டார்.
திமுக தலைவர் கருணாநிதி இந்தப் பிரச்சனையை அவ்வப்போது கிளப்பியதை சுட்டிக் காட்டினோம். இனிமேல்பிரச்சினைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தருவோம் என்று கூறிவிட்டுத் திரும்பினோம் என்றார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications