ரகசியமாய் பதவியை நீடித்துக் கொண்டாரா சந்திரிகா?
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ரகசியமாக தன் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சந்திரிகாவின் பதவிக் காலம் 2005ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் இருமுறைதான் அதிபர் பதவி வகிக்க முடியும். சந்திரிகா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
மீண்டும் அவர் சட்டப்படி அதிபராக முடியாது என்பதால் மூடிய அறைக்குள் பதவியை நீட்டித்து, அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி சரத் டிசில்வா ரகசியமாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாகத் தெரிகிறது.
புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் பல தீர்ப்புகளை வழங்கி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பவர் சரத் டிசில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரகசிய பிரமாணம் கடந்த 11ம் தேதி செய்து வைக்கப்பட்டதாகவும், இதனால் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் அதிபர் தேர்தல் வர வாய்ப்பேயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜனதாச பெரீஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று ஒரு வரியில் பதிலளித்தார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications