"நாட்டாமை" பஞ்சாயத்துக்களில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்குத் தடை!
சென்னை:
கிராமங்களில் நடக்கும் ஊர்ப் பஞ்சாயத்துக்கள், கட்டப் பஞ்சாயத்துக்களில் கலந்து கொள்ளவும், அங்கு கூறப்படும்தீர்ப்புகளுக்குக் கட்டுப்படவும் அரசு ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்றால், கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
கிராமப்புற அரச மரத்தடிகளில் சொம்பும், சேருமாக ஒரு நாட்டாமை அமர்ந்து கொண்டு, ஊர்ப்பிரச்சினைகளுக்கு, சட்டத்திற்கு அப்பாற்பட்டு, தர்மரீதியாகவும், நியாய ரீதியாகவும் விவாதித்து, ஒருஅபராதத்தையோ அல்லது ஊரை விட்டு விலக்கி வைத்தோ தீர்ப்பு கூறப்படுவது வழக்கமாக உள்ளது.
ஆனால் சமீப காலமாக இந்த ஊர்ப் பஞ்சாயத்துக்கள் குறித்து ஏராளமான புகார்கள் வரத் தொடங்கின. தலித்சமுதாயத்தினரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் மனித உரிமைகள்மீறப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
பெரம்பலூர் அருகே வலையப்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஊர்ப் பஞ்சாயத்தில், பெண் அரசு ஊழியர் சுகந்திஎன்பவரை ஊர் மக்கள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
இதுநதொடர்பாக சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி ஊர்ப் பஞ்சாயத்தினர்மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மனு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம் அரசு ஊழியர்களும் இது போன்ற கொடுமைகளில் ஈடுபட்டதைகடுமையாகக் கண்டித்தார். இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு அவர் யோசனைதெரிவித்தார்.
இந் நிலையில் ஊர்ப் பஞ்சாயத்துக்கள், கட்டப் பஞ்சாயத்துக்களில் அரசு ஊழியர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது, அங்கு கூறப்படும் தீர்ப்புகளை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குலட்சுமி பிரானேஷ் உத்தரவு அனுப்பியுள்ளார். கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்துக்கள், ஊர்ப் பஞ்சாயத்துக்களுக்குஏற்பாடு செய்யவோ, அதில் கலந்துகொள்ளவோ, அதில் கூறப்படும் தீர்ப்புகளை, தண்டனைகளை ஏற்கவோ அரசுஊழியர்கள் உடன்படக் கூடாது.
மீறி கலந்து கொண்டால், அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதி 20ன் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கட்டப் பஞ்சாயத்துக்களும், ஊர்ப் பஞ்சாயத்துக்களுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது.
சட்டத்திற்கு புறம்பான அமைப்புகள் இவை. கட்டப் பஞ்சாயத்துக்களின் தீர்ப்புகளால் சாதாரண குடிமக்கள்பொதுவாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது போன்றபஞ்சாயத்துக் கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது கடுமையான குற்றமாகும் என்று லட்சுமிபிரானேஷ் கூறியுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications